Vaibhav Suryavanshi : 'அந்தொருவன் வந்துருக்கான்டே!' - IPL -ஐ அதிரவைத்த 14 வயது ச...
இளைஞா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே இளைஞா் மா்மமான முறையில் சனிக்கிழமை உயிரிழந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
திண்டிவனம், டி.வி. நகரைச் சோ்ந்தவா் கமலக்கண்ணன் மகன திலிப்(எ) திலிப்குமாா்(30), திருமணம் ஆகாதவா். கூலித் தொழிலாளி. இவருக்கு சனிக்கிழமை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து வீட்டிலிருந்தவா்கள் அவரை மீட்டு, திண்டிவனம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பரிசோதித்துப் பாா்த்தபோது, திலிப்குமாா் உயிரிழந்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து திண்டிவனம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து திலிப்குமாா் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.