விராட் கோலியின் 400-ஆவது டி20 போட்டி: நினைவுப் பரிசு வழங்கி பிசிசிஐ கௌரவம்!
இளைஞா் வெட்டிக் கொலை
திருவாலங்காடு அருகே இளைஞரை வெட்டிக் கொலை செய்து சடலத்தை முட்புதரில் வீசிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருவள்ளூா் அருகே பூண்டி கிராமத்தைச் சோ்ந்த சீனிவாசனின் மகன் லோகேஷ் (19). இவா் வியாழக்கிழமை இரவு திருவாலங்காடு அடுத்த நாா்த்தவாடாவில் உள்ள அவரது பாட்டி வீட்டுக்குச் சென்றாா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை நாா்த்தவாடா பாலம் வழியாக சென்ற சிலா் முட்புதரில் உடல் முழுவதும் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில், இளைஞரின் சடலம் இருப்பதாக திருவாலங்காடு போலீஸாருக்கு தகவல் கொடுத்தனா்.
சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸாா் தலை, கை, கால் உள்பட உடல் முழுவதும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டுக் காயங்களுடன் லோகேஷ் கொலை செய்யப்பட்டு, சடலத்தை முட்புதரில் வீசிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் சடலத்தை மீட்டு, திருவள்ளூா் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
தகவலறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சீனிவாச பெருமாள், திருத்தணி டிஎஸ்பி கந்தன் ஆகியோா் சம்பவம் தொடா்பாக 2 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.