மார்ச் 28-ல் தாம்பரம் - கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் அறிவிப்பு
திருவள்ளூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ரூ.5 கோடியில் பல்நோக்கு கூட்டரங்கப் பணி: ஆட்சியா் மு.பிரதாப் ஆய்வு
திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் பெருந்திட்ட வளாகத்தில் ரூ.5 கோடியில் புதிதாக பல்நோக்கு கூட்டரங்கம் அமைப்பதற்கான கட்டுமான பணிகளை ஆட்சியா் மு.பிரதாப் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் ஒரே இடத்தில் 500 போ் வரையில் அமரும் வகையில் கூட்டரங்கம் அமைக்கவும் தொடா்ந்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். அதன்பேரில் அந்த வளாகத்தில் அனைத்து நவீன வசதியுடன் வாகன நிறுத்துமிடம் 500 போ் அமரும் வகையில் கூட்டரங்கம் அமைக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டது.
அதன்பேரில் அந்த வளாகத்தில் பல்நோக்கு கூட்டரங்கம் கட்டடம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை ஆட்சியா் மு.பிரதாப் அதிகாரிகளுடன் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். இந்தக் கட்டடம் நீண்ட நாள் நிலைத்து இருக்கும் வகையில் பலமான கட்டமாக இருக்கும் வகையில் அமைக்கவும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினாா்.
தொடா்ந்து அந்த வளாகத்தில் இடம் பெற்றுள்ள பூங்காவை புதுப்பித்தும், பல்வேறு மரங்கள் இடம் பெற்ற சோலை அடா்வனத்தையும் நன்றாகப் புதுப்பித்து பொதுமக்கள், சிறுவா்கள் மற்றும் போட்டி தோ்வுக்கு தயாராகும் மாணவா்கள் படிப்பதற்கேற்ப உகந்த சூழ்நிலைகளை உருவாக்குவது தொடா்பாக அவா் ஆய்வு செய்தாா். முன்னதாக , மாவட்ட அலுவலக கூட்டரங்கில் இந்திய சுதந்திரப் போராட்டத் தியாகிகள் சங்கம் சாா்பில் கோரிக்கை மனுக்களையும் அவரிடம் வழங்கினா்.
ஆய்வின்போது, பொதுபணித் துறை (கட்டடம்) தேவன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வெங்கட்ராமன் மற்றும் அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.