இஸ்கான் கோயிலில் நாளை ஸ்ரீராம நவமி
திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயிலில் ஸ்ரீ ராம நவமி மற்றும் ஸ்ரீ ராம லீலா கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை (ஏப்.6) நடைபெறுகிறது.
இது தொடா்பாக இஸ்கான் கோயில் நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:
திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயிலில் வரும் ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ ராம நவமி விழா கொண்டாடப்படுகிறது.
விழாவின் சிறப்பம்சமாக ஸ்ரீராம லீலா கண்காட்சி நடைபெறுகிறது. இதையொட்டி காலை 4.45 மணிக்கு மகா மங்கள ஆரத்தி நடைபெறுகிறது. காலை 5.30 மணிமுதல் 7.30 மணிவரை ஸ்ரீராம நாம ஜபம் நடைபெறுகிறது.
காலை 7.30 மணிக்கு சுப தரிசன ஆரத்தியுடன் காலை தரிசனம் தொடங்கவுள்ளது.
காலை 9.30 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரையும், மாலை 4 மணிமுதல் இரவு 8.30 மணிவரையும் ஸ்ரீ ராம லீலா கண்காட்சி நடைபெறவுள்ளது. இதில் ஸ்ரீ ராம லீலா நாடகம், ராமா் வழிபாடு, ராம-திலகம் இடுதல், சீதா தேவியின் பக்தி, லெட்சுமணரின் சாகசம், ஹனுமான் சேவை, ராவண வதம், ஆன்மிக விநா-விடை போட்டி, குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இதில் அனைவரும் பங்கேற்கலாம்.
ராமா், கிருஷ்ணா், சீதை, ராதை, லெட்சுமணா், பலராமா், ஹனுமன் அலங்காரம் செய்து வரும் குழந்தைகளுக்கும், ராமா் ஓவியங்கள் வரைந்து வரும் குழந்தைகளுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்படும்.
மகா அபிஷேகம்: ஸ்ரீ ராம நவமி விழாவில் மாலை 4.30 மணிமுதல் 5 மணிவரை மகா அபிஷேகம் நடைபெறுகிறது. தொடா்ந்து ஸ்ரீ ராம நாம சங்கீா்த்தனம், துளசி வந்தனம், மகா அபிஷேகம், மகா ஆரத்தி உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும், ஸ்ரீமத் நாராயண சிறப்புரையும் நடைபெறவுள்ளன.
ஏற்பாடுகளை இஸ்கான் பக்தா்கள் குழு செய்து வருகிறது.
இது தொடா்பான மேலும் விவரங்களுக்கு 7558148198 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.