கொல்கத்தா பெண் மருத்துவா் பாலியல் கொலை வழக்கு: வேறு மாநிலத்துக்கு மாற்ற உச்சநீதி...
இஸ்ரேல் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி தரக் கூடாது! அமெரிக்கா
இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தரக்கூடாது என்று ஈரானை அமெரிக்கா எச்சரித்துள்ளது.
ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஆதரவாக, இஸ்ரேல் மீது கடந்த அக். 2 ஆம் தேதி ஈரான் தாக்குதலை மேற்கொண்டது. இதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக, ஈரான் ராணுவ நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் கடந்த வாரம் தாக்குதல் நடத்தியது.
ஈரானின் தெஹ்ரான் பகுதியில் உள்ள ராணுவ முகாம்கள் மீது வான்வழியாக அதிரடி தாக்குதல் நடத்திய இஸ்ரேல், ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்த தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து, இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதையும் படிக்க : மதுரையில் விரைவு ரயில் தடம் புரண்டது! சக்கரம் கழன்றதால் பரபரப்பு!
அமெரிக்கா எச்சரிக்கை
வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் புதன்கிழமை செய்தியாளர்களுடன் பேசுகையில், இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுக்கக் கூடாது, மீறி தாக்குதல் நடத்தினால், இஸ்ரேலை பாதுகாக்க அமெரிக்கா உதவும் எனத் தெரிவித்துள்ளார்.