செய்திகள் :

``இஸ்லாமியர்கள் எனக்கு சித்தப்பா; நான் அவர்களுக்கு மகன்'' - நோன்பு நிகழ்ச்சியில் ராஜேந்திர பாலாஜி

post image

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு இஸ்லாமியர்களுடன் அமர்ந்து நோன்பு கஞ்சி அருந்தினார்.

ராஜேந்திர பாலாஜி

இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க.வினர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி பேசும்போது, "விஸ்வகர்மா குலத்தைச் சேர்ந்த இப்ராஹிம் நபிகளின் தந்தை கடவுள் அருளால் இஸ்லாத்தை தழுவி அவரது மகன் இப்ராஹிம் இறை தூதராக இறைவனால் அனுப்பப்படுகிறார்.

இவரின் மகன்களில் ஒருவரான இஸ்மாயில் வழி வந்தவர்கள் இஸ்லாமியர்கள் எனவும், மற்றொரு மகனான யாக்கோபு வழிவந்தவர்கள் யூதர்கள் எனவும் அழைக்கப்படுகின்றனர். இதிலிருந்து இஸ்லாமியர்களுக்கும், விஸ்வகர்மா சமுதாயத்தில் பிறந்த எனக்கும் தொப்புள்கொடி உறவு இருப்பது உறுதியாகி உள்ளது.

எனவேதான் இஸ்லாமியர்களை நான் 'சித்தப்பா' என அழைப்பேன். அவர்கள் என்னை 'மகன்' என அழைப்பார்கள். இஸ்லாமியர்கள் பிரதிபலன் பார்க்காமல் தி.மு.க.வுக்கு வாக்களித்தார்கள். தி.மு.க. இஸ்லாமியர்களுக்கு ஒரு நலத்திட்டமும் செய்யவில்லை. இஸ்லாமியர்களை தி.மு.க. வாக்களிக்கும் இயந்திரமாக பயன்படுத்தியது.

நோன்பு திறப்பு

இஸ்லாமிய பள்ளி வாசல்களுக்கு காவல்துறையை அனுப்பி சோதனை செய்த வரலாறு தி.மு.க.ஆட்சியில் உண்டு. இஸ்லாமிய இளைஞர்கள் வன்முறையாளர்களாக சித்தரிக்கப்பட்டார்கள். எஸ்.டி.பி.ஐ.கட்சியில் வீரமிக்க இளைஞர்கள் அதிகம் இருக்கிறார்கள். ஆகவே இந்த கட்சியை முடக்க தி.மு.க. முயற்சி செய்கிறது.

இஸ்லாத்தைப் பகைத்தவர்கள் ஆண்டதாக வரலாறு கிடையாது. இஸ்லாமியர்களை நம்பியவர்கள் கெட்டதாக வரலாறு கிடையாது. அ.தி.மு.க. அவர்களை நம்பி இருக்கிறோம். ஆனால் தி.மு.க. அவர்களை வம்புக்கு இழுக்கிறது" என பேசினார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

`ஒப்பந்த பணிகளுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரம்' - அண்ணன் மகன் கைது சிக்கலில் ஆர்.காமராஜ்!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜின் அண்ணன் மகன் இளமுருகன். அரசு முதல் நிலை ஒப்பந்ததாரரான இவர் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சாலை, கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் டெண்டர் எடுத்து செய்து வருவதாக... மேலும் பார்க்க

வக்பு சட்டத்திருத்த மசோதா; சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டுவந்த ஸ்டாலின்

நாடு முழுவதும் வக்பு வாரிய சொத்துளை ஒழுங்குபடுத்த வழிவகுக்கும் வக்பு சட்டத்திருத்த மசோதா, மக்களவையில் கடந்த ஆகஸ்டில் அறிமுகம் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து மசோதாவை ஆய்வு... மேலும் பார்க்க

Army: ``அதிவிரைவு தொழில்நுட்பத்திற்கு அக்னி வீரர்கள் தயாராக இருக்க வேண்டும்'' - தலைமை தளபதி அறிவுரை

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள வெலிங்டன் பகுதியில் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்ட்டர் எனப்படும் இந்த ராணுவ வீரர்களுக்கான பயிற்சி மையம் இயங்கி வருகிறது. முப்படை அதிகாரிகளுக்கான பயிற்சி கல்லூரியும் இ... மேலும் பார்க்க

Doctor Vikatan: திடீர் நெஞ்சு வலி என்ன காரணம்? | Heart Attack

Doctor Vikatan: தெரிந்த நண்பருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை (Bypass surgery) செய்யப்பட்ட ஒரே வாரத்தில் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு, உயிர் பிரிந்ததாக கூறுகின்றனர். இப்படி ஏற்பட வாய்ப்புகள் உள்ளனவா?பதில் சொல்க... மேலும் பார்க்க

US: `சீனாவிற்கு அடுத்து இந்தியா!' - வெளியான அறிக்கை; இந்தியாவுக்கு வரியை கூட்டுமா அமெரிக்கா?

வரும் ஏப்ரல் 2-ம் தேதி முதல், எந்த நாடு அமெரிக்காவின் மீது அதிக வரி விதிக்கிறதோ, அந்த நாட்டின் மீது பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.அமெரிக்க பொருள்களின் மீத... மேலும் பார்க்க

``மதுரையில் CPM மாநாடு; பிரகாஷ்ராஜ், விஜய்சேதுபதி, சசிகுமார், சமுத்திரகனி பங்கேற்பு'' - பெ.சண்முகம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு, மதுரையில் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் 6-ஆம் தேதிவரை நான்கு நாள்கள் நடைபெற உள்ளது.மாநாட்டிற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், மாநாட்டு அழைப... மேலும் பார்க்க