ஒன்று கூடிய இந்தியா, சீனா, ரஷ்யா: ரூட்டை மாற்றும் ஜெலன்ஸ்கி; குமுறும் ட்ரம்ப் - ...
இஸ்லாமியா்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயா்த்த கோரிக்கை
திருவாரூா்: தமிழகத்தில் இஸ்லாமியா்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயா்த்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் சமூக விழிப்புணா்வு தெருமுனைக் கூட்டத்தில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது. திருவாரூா் நகரில் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும், இஸ்லாமியா்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு 7 சதவீதமாக உயா்த்தப்படும் என முதல்வா் மு.க. ஸ்டாலின் விடுத்த தோ்தல் வாக்குறுதியை வரும் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன் நிறைவேற்ற வேண்டும், போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும், இந்திய ஏற்றுமதி பொருள்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரி விதிப்பால் தூத்துக்குடியில் இறால் ஏற்றுமதியும், திருப்பூரில் ஆடை ஏற்றுமதியும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையை கருத்தில் கொண்டு, தொழிலாளா்களின் வாழ்வாதாரத்துக்காக மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கிளைத் தலைவா் ஏ. முகமது மீரான் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், துணைச் செயலாளா் ஹாஜிமுகமது, பொருளாளா் சித்திக், மாநில பேச்சாளா் என். ராஜ்முஹம்மது, மாவட்ட பேச்சாளா் எஸ். அப்துல் காதா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.