செய்திகள் :

`ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலைப் புறக்கணக்கிறோம்...!' - அண்ணாமலை அறிவிப்பு

post image
அதிமுக, தேமுதிக-வைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.

- =ஏ 121காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி காலமானார். இதையடுத்து அத்தொகுதிக்கு பிப்ரவரி 5 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அந்தத் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும் என்று எதிர்பார்த்த நிலையில் திமுக போட்டியிடுகிறது. இந்த இடைத்தேர்தலை அதிமுக, தேமுதிக கட்சிகள் புறக்கணித்து இருந்தது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.

ஈவிகேஎஸ்
ஈவிகேஎஸ்

இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டிருந்த அறிக்கையில், " கடந்த நான்கு ஆண்டுகளாக, தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்கள் விரோத ஆட்சியைப் பார்த்து வருகிறோம். எல்லா துறைகளிலும் ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, வேலைவாய்ப்பின்மை, பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறையினர் என யாருக்குமே பாதுகாப்பின்மை என, தமிழகம் ஒரு இருண்ட காலத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது. சட்டமேதை அம்பேத்கர் அவர்கள் நமக்கு வழங்கிய அரசியல் சாசன சட்டத்திற்கு நேர் எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது திமுக அரசு. இந்த ஆட்சியின் அவலங்களைத் தினந்தோறும் சகித்துக் கொண்டுள்ள மக்கள், இது திராவிட மாடல் இல்லை. Disaster மாடல் என்று உரக்கச் சொல்லத் துவங்கிவிட்டனர்.

ஈரோடு கிழக்கு தொகுதியைப் பொறுத்தவரை நடைபெறவிருப்பது இடைத் தேர்தலுக்கான இடைத் தேர்தல். கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத் தேர்தலின்போது பொதுமக்களைப் பட்டியில் கொடுமைப்படுத்தியதைப் பாரத்தோம். ஆளுங்கட்சி என்ற அதிகார மமதையில், திமுக, தேரதல் விதிமுறைகளை எல்லாம் மீறிச் செயல்பட்டதை நாம் அனைவருமே எதிர்கொண்டோம். வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல், திமுகவை முழுமையாக அகற்றவிருக்கும் தேர்தல் அந்த இலக்கை நோக்கியே தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதன் நடுவே, இடைத்தேர்தலில் மீண்டும் கால்நடைகளைப் போலப் பொதுமக்களை அடைத்து வைக்க திமுகவை அனுமதிக்கத் தேசிய ஜனநாயகக் கூட்டணி விரும்பவில்லை.

மக்கள் நலன் விரும்பும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் நன்கு கலந்தாலோசித்த பிறகு ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலை தேசிய ஜனநாயகக் கூட்டணி புறக்கணிப்பதாக முடிவெடுத்துள்ளோம். 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுகவை அகற்றி மக்களுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நல்லாட்சியை வழங்குவதே எங்கள் இலக்கு" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் பெண்களுக்கான திட்டங்களும், அதிகரித்த வாக்காளர் எண்ணிக்கையும் - ஆய்வறிக்கை சொல்வதென்ன?

அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் ஜனநாயகத்தை ஊக்குவிக்கும் ஒரு பெரிய சக்தியாக செயல்படுகின்றன.குறிப்பாக, பெண்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சமூக நலத்திட்டங்கள் இந்தியாவின் அரசியல் அமைப்... மேலும் பார்க்க

மாநகராட்சி தேர்தலில் தனித்து போட்டியிட தாக்கரே, சரத் பவார் முடிவு: தனித்துவிடப்படும் காங்கிரஸ்?

மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை உள்ளடக்கிய மகாவிகாஷ் அகாடி கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. இத்தோல்வியால் எதிர்க்கட்சிகள் அ... மேலும் பார்க்க

ஈரோடு: `நாமம்' போட்டு காங்கிரஸார் எதிர்ப்பு; வைரலாகும் திமுக நிர்வாகியின் பதிவு - வெடிக்கும் சர்ச்சை

ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கடந்த சில நாள்களுக்கு முன்பு உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து, பிப்ரவரி 5-ஆம் தேதி கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல்... மேலும் பார்க்க

'ஸ்டாலினின் இந்த ஆணவம் நல்லதல்ல...' - தேசிய கீத விவகாரத்தில் ஆளுநர் மாளிகை காட்டம்

முதல்வர் ஸ்டாலினின் ஆணவம் நல்லதல்ல என ஆளுநர் மாளிகை கண்டனம் தெரிவித்திருக்கிறது.2025 ஆம் ஆண்டிற்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரின்போது பேரவைக்குள் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசிய கீதம் இச... மேலும் பார்க்க

Trump: டிரம்ப் பதவியேற்பு விழாவில் ஜெய்சங்கர்! - இந்தியா - அமெரிக்கா உறவு வலுக்குமா?!

கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க தேர்தலில், ஜனநாயக கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸை எதிர்த்து குடியரசு கட்சி சார்பாக டிரம்ப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். டிரம்ப் வரும் 20-ம் தேதி 47-வது அமெரிக்க அதிபராக பொற... மேலும் பார்க்க

பெரியார் விவகாரம் : `ஆதாரம் இருக்கு... ஆனா இல்ல’ - சீமான் சர்ச்சை பேச்சுக்கு நா.த.க சொல்வதென்ன?

பெரியார் குறித்த கருத்துபெரியார் குறித்து, `விமர்சனம்’ என்கிற பெயரில் அவதூறுகளை அள்ளி வீசியிருக்கிறார் ‘நாம் தமிழர் கட்சி’யின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் என கொதிக்கிறது திராவிட அமைப்புகள். அதேசமயம்... மேலும் பார்க்க