செய்திகள் :

ஈரோடு: சிவகிரி முதிய தம்பதி கொலை வழக்கு சிபி-சிஐடிக்கு மாற்றம்!

post image

சிவகிரி அருகே தோட்டத்து வீட்டில் வாழ்ந்து வந்த முதிய தம்பதி கொலை வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

சிவகிரி முதிய தம்பதி கொலை வழக்கில் கைதான மூன்று பேரையும், முன்னதாக சிபிசிஐடி காவல்துறையினர் அனுமதி பெற்று விசாரணை நடத்தியிருந்தனர். மேலும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் மூன்று முக்கிய குற்றவாளிகளுக்கு, பல்வேறு வழக்குகளில் தொடர்பிருப்பதாக தெரிய வந்த நிலையில் வழக்கு விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், சிவகிரி, உச்சிமேடு மேகரையான் தோட்டத்தில் வசித்து வந்த வயதான தம்பதி ராமசாமி, பாக்கியத்தை ஏப்ரல் 28-ம் தேதி கொலை செய்த கும்பல், வீட்டிலிருந்த 10 பவுன் நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றது.

இத்துணிகர சம்பவத்தில் ஈடுபட்டதாக அறச்சலூரைச் சோ்ந்த ஆச்சியப்பன், மாதேஷ்வரன், ரமேஷ் மற்றும் சென்னிமலை, பசுவப்பட்டியைச் சோ்ந்த நகை வியாபாரி ஞானசேகரனும் கைது செய்யப்பட்டனா்.

இதற்கிடையே, திருப்பூா் மாவட்டம், அவிநாசிபாளையம், சேமலைகவுண்டன்பாளையத்தில் வயதான தம்பதி தெய்வசிகாமணி, அலுமேலு, இவா்களின் மகன் செந்தில்குமாா் ஆகியோா் கொலை வழக்கில் ஆச்சியப்பன், மாதேஷ்வரன், ரமேஷுக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது. தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்டதால் இவா்கள் மூவரும் குண்டா் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

முன்னதாக சிவகிரி இரட்டைக் கொலை மற்றும் திருப்பூா் மூவா் கொலை வழக்கில் நீதிமன்றக் காவலில் உள்ள ஆச்சியப்பன், மாதேஷ்வன், ரமேஷ் ஆகியோரிடம் காவல்துறையினரும், சிபிசிஐடி அதிகாரிகளும் விசாரணை நடத்தியதில் பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், வழக்கு விசாரணை விரைவாக நடைபெறும் வகையில், இன்று இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் அருகே மறுநடவு செய்து துளிர்த்து வந்த அரச மரத்துக்கு தீ வைப்பு!

காஞ்சிபுரம் அடுத்த கீழ்க்கதிர்பூர் பகுதியில் மறு நடவு செய்யப்பட்டு, துளிர்த்துவந்த அரச மரத்துக்கு மர்ம நபர்கள் தீ வைத்தது குறித்து பசுமை ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அ... மேலும் பார்க்க

பாரூர் ஏரியிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு!

பாரூர் ஏரியிலிருந்து பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம், பாரூர் ஏரியிலிருந்து விவசாய பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்து விடும் பணியை கிருஷ்ணகிரி மாவ... மேலும் பார்க்க

உள்ளாட்சியில் ஊழல்; திமுகவினரைக் காப்பாற்ற ஸ்டாலின் முயற்சி! - இபிஎஸ் குற்றச்சாட்டு

மதுரை மாநகராட்சியில் சொத்து வரி விதிப்பதில் மிகப்பெரிய ஊழல் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எங்கு ந... மேலும் பார்க்க

பணி நேரத்தில் தூங்கியதால்: அரக்கோணம் அருகே ரயில்வே கேட் கீப்பர்கள் பணியிடை நீக்கம்!

அரக்கோணம்: அரக்கோணம் அருகே ரயில்வே கேட் கீப்பர் பணியின்போது, நள்ளிரவில் பணி நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்த இரு பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.கடந்த இரு தினங்களுக்கு முன்பு கடலூர் அருகே... மேலும் பார்க்க

துரோகி பட்டம் கொடுத்து மதிமுகவிலிருந்து வெளியேற்ற முயற்சி: மல்லை சத்யா

துரோகி பட்டம் கொடுத்து மதிமுகவில் இருந்து வெளியேற்ற வைகோ முயற்சி செய்கிறார் என்று துணை பொதுச் செயலா் மல்லை சத்யா குற்றம்சாட்டியிருக்கிறார்.முன்னதாக, பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்தது போல், எனக்கு... மேலும் பார்க்க

கடலூர் ரயில் விபத்து: 13 பேரிடம் தனித்தனியாக விசாரணை!

கடலூா் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விவகாரத்தில் கேட் கீப்பா், ரயில் ஓட்டுநா்கள் உள்ளிட்ட 13 பேரிடம் தனித்தனியாக விசாரணை நடைபெற்று வருகின்றன.கடலூா் மாவட்டம், செம்மங்குப்பம் ரயில்வே தண்டவாளத்தை செவ்வாய்... மேலும் பார்க்க