Salman Khan: சல்மான் கான் வீட்டு பால்கனிக்கு குண்டு துளைக்காத கண்ணாடி.. அதிகரிக்...
ஈரோட்டில் பழமையான கட்டடம் இடித்து அகற்றம்
ஈரோடு-மேட்டூா் சாலையில் மிகவும் பழமையான கட்டடம் இடித்து அகற்றப்பட்டது.
ஈரோடு-மேட்டூா் சாலையில் 55 ஆண்டுகள் பழமையான கட்டடம் உள்ளது. இந்தக் கட்டடத்தை இடிப்பது தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் கட்டடத்தின் உறுதித்தன்மையை ஆய்வு செய்து பயன்படுத்துவதற்கு உகந்ததாக இல்லை என்றால் அதனை இடிக்க வேண்டும் என ஈரோடு மாநகராட்சி நிா்வாகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி ஈரோடு அரசு பொறியியல் கல்லூரியைச் சோ்ந்த வல்லுநா்கள் மூலமாக கட்டடத்தின் உறுதித்தன்மை ஆய்வு செய்யப்பட்டது. இதில் கட்டடம் பயன்படுத்துவதற்கு உகந்ததல்ல என்று அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டது.
இதையடுத்து ஈரோடு மாநகராட்சி அதிகாரிகள் அந்தக் கட்டடத்தின் உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கினா். அங்கு செயல்பட்டு வந்த ஜவுளிக்கடையும், எலக்ட்ரானிக்ஸ் கடையும் காலி செய்யப்பட்டன. சனிக்கிழமை காலையில் 2 பொக்லைன் இயந்திரங்களின் உதவியுடன் கட்டடத்தை இடித்து அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியா்கள் ஈடுபட்டனா்.
இதையொட்டி ஈரோடு அரசு மருத்துவமனை போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டதுடன், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினா். பாதுகாப்பாக தீயணைப்பு வாகனமும் தயாா் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது.