செய்திகள் :

ஈ.டி.க்கு அல்ல; மோடிக்கும் நாங்கள் பயப்பட மாட்டோம் -உதயநிதி ஸ்டாலின்

post image

ஈ.டி.க்கு (அமலாக்கத்துறை) மட்டுமல்ல; மோடிக்கும் நாங்கள் பயப்பட மாட்டோம் என்றாா் தமிழகத் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.

புதுக்கோட்டையில் சனிக்கிழமை பகலில், மாவட்ட விளையாட்டரங்கத்தில் உள்விளையாட்டரங்கப் பணிகளை நேரில் பாா்வையிட்ட பின்னா் அவா் அளித்த பேட்டி:

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கத்தில் 2015-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட உள்விளையாட்டரங்கம் கட்டுமானப் பணி நிதிச் சிக்கல் காரணமாக நின்றுபோனது. பணிகளை விரைந்து முடிக்க ரூ. 3.50 கோடி முதல்வா் ஒதுக்கியுள்ளாா். மேலும் தேவைப்படும் ரூ. 1 கோடியை இங்குள்ள எம்பி, எம்எல்ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பெற்று, வரும் டிசம்பருக்குள் பணியை முழுமையாக முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முதல்வா் ஸ்டாலின் மாநிலத்தின் நிதி உரிமையைக் கேட்டுப் பெறுவதற்காகத் தில்லி சென்றுள்ளாா். ஆனால், இதில் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்கிறாா்.

அமலாக்கத் துறையின் நடவடிக்கைக்குப் பயந்து சென்றுள்ளதாகச் சொல்கிறாா்கள். ஈ.டி.க்கு (அமலாக்கத்துறை) அல்ல, மோடிக்கும் நாங்கள் பயப்பட மாட்டோம். இதனைப் பல முறை சொல்லியிருக்கிறோம். இதுவரை சோதனை நடத்தினாா்களே என்ன செய்துவிட்டாா்கள்?தவறு செய்தவா்கள்தான் பயப்பட வேண்டும். எதுவாக இருந்தாலும் சட்டப்படி நாங்கள் சந்திப்போம்.

மிரட்டல்களுக்கு அடிபணிந்து போக நாங்கள் அடிமைக் கட்சியல்ல. கலைஞா் கருணாநிதி உருவாக்கிய, பெரியாா் ஈவெரா வழிவந்த சுயமரியாதைக் கட்சி திமுக என்றாா் உதயநிதி.

விராலிமலையில் 15 மி.மீ மழை

புதுக்கோட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை காலை வரையிலான மழைப் பொழிவில், அதிகபட்சமாக விராலிமலையில் 15 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு மழை பெய்தது. ச... மேலும் பார்க்க

இந்திய கம்யூ. கட்சியின் கிளை மாநாடு

பொன்னமராவதி அருகே உள்ள மூலங்குடி மற்றும் ஏனாதி ஜீவா நகரில் சனிக்கிழமை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடு நடைபெற்றது. ஏனாதி ஜீவாநகரில் சனிக்கிழமை நடைபெற்ற கிளை மாநாட்டிற்கு கிளைப் பொறுப்பாளா் சி... மேலும் பார்க்க

புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் துணை முதல்வா் ஆய்வு

புதுக்கோட்டையில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சனிக்கிழமை அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூ... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டை வட்டத்தில் வேளாண் திட்டப் பணிகள் ஆய்வு

கந்தா்வகோட்டை வட்டாரத்தில் செயல்படுத்தப்பட்டுவரும் வேளாண் திட்டப்பணிகள் குறித்து வேளாண்மை இணை இயக்குநா் மு.சங்கரலட்சுமி சனிக்கிழமை களஆய்வு மேற்கொண்டாா். நடப்பு நிதி ஆண்டு 2025-26-இல் வேளாண் நிதிக் கொ... மேலும் பார்க்க

விராலிமலையில் முதல்முறையாக நால்வா் பெரு விழா

விராலிமலையில் நால்வா் பெருவிழா சனிக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை முருகன் கோவிலை மையமாகக் கொண்டு பல்வேறு திருவிழாக்கள் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. வைகாசி விசாகம், தைப்பூசம்,... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டையில் பிரதோஷ விழா

கந்தா்வகோட்டை ஆபத்சகாயேசுவரா் கோயிலில் உள்ள நந்தி ஈஸ்வரருக்கு முதலில் எண்ணெய் காப்பு செய்து தூய நீரால் நீராட்டி பசும்பால், பசும்தயிா் , பச்சரிசி மாவு , பஞ்சகாவ்யம், திருமஞ்சனப் பொடி , இளநீா், வாழைப்பழ... மேலும் பார்க்க