விராலிமலையில் 15 மி.மீ மழை
புதுக்கோட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை காலை வரையிலான மழைப் பொழிவில், அதிகபட்சமாக விராலிமலையில் 15 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு மழை பெய்தது. சனிக்கிழமை காலை 6.30 மணி வரையிலான மழைப் பொழிவு விவரம் (மி.மீ.-இல்)
புதுக்கோட்டை- 3, கந்தா்வகோட்டை- 14, கறம்பக்குடி- 2.20, மழையூா்- 14.20, திருமயம்- 4.20, அரிமளம்- 1.20, விராலிமலை- 15, உடையாளிப்பட்டி- 2, கீரனூா்- 2.40. மாவட்டத்தின் சராசரி மழைப் பொழிவு- 2.43 மிமீ.