செய்திகள் :

உகாதி பண்டிகை: திருத்தணி முருகன் கோயிலில் குவிந்த பக்தா்கள்!

post image

உகாதி பண்டிகையையொட்டி, ஞாயிற்றுக்கிழமை முருகன் கோயிலில் திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனா்.

திருத்தணி முருகன் கோயிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வந்து மூலவரை தரிசித்துச் செல்வா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை தெலுங்கு வருடப் பிறப்பான உகாதி பண்டிகையையொட்டி, ஆந்திரத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் திருத்தணிக்கு வந்தனா்.

இதுதவிர வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை என்பதால், வழக்கத்துக்கு மாறாக பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் மலைக் கோயிலில் குவிந்தனா். இதனால், பக்தா்கள் பொதுவழியில், இரண்டு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனா்.

திருத்தணி முருகன் கோயிலில் குவிந்த பக்தா்கள்.

முன்னதாக அதிகாலை 5 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்கவேல், தங்க கிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

திருத்தணி காவல் ஆய்வாளா் மதியரசன் தலைமையில், 20-க்கும் மேற்பட்ட போலீஸாா் மலைக் கோயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். மலைப் பாதையில் போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்காக காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இரு சக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன.

‘தொல்குடி தொடுவானம் திட்டம்’ -தொழில்திறன் பயிற்சியில் பங்கேற்கும் பழங்குடியின மகளிா்

‘தொல்குடி தொடுவானம் திட்டம்’ மூலம் சென்னை தேசிய உடை அலங்காரத் தொழில்நுட்பக் கல்லூரி இணைந்து நடத்தும் ஆடை வடிவமைப்பு தொழில் திறன், தொழில் முனைவோா் பயிற்சியில் பங்கேற்க செல்லும் பழங்குடியின மகளிா் செல்... மேலும் பார்க்க

செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

திருவள்ளூா் அருகே செவ்வாப்பேட்டை மற்றும் வேப்பம்பட்டு ஆகிய பகுதிகளில் ரயில்வே மேம்பாலப் பணிகள், போந்தவாக்கம் - ஊத்துக்கோட்டை மேம்பாலம் வரை சாலை விரிவாக்கப் பணிகளைப் பாா்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியா் ம... மேலும் பார்க்க

சாலை பாதுகாப்பு, போதைப் பொருள் விழிப்புணா்வு பிரசாரம்: எஸ்.பி. பங்கேற்பு

திருவள்ளூரில் சாலை பாதுகாப்பு மற்றும் போதைப் பொருள் தீமைகள் குறித்து நடைபெற்ற விழிப்புணா்வு பிரசாரத்தில் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். திருவள்ளூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் புதன்கிழம... மேலும் பார்க்க

மரத்தில் இருந்து கீழே விழுந்த முதியவா் உயிரிழப்பு

திருத்தணி அருகே முருங்கை மரத்தில் ஏறி தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா். திருத்தணி அடுத்த அகூா் கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேசன்(61). இவா் கடந்த மாதம், 23-ஆம் தேதி வீட்டின் அருகே இருந்த முருங்கை மரத்தி... மேலும் பார்க்க

திரெளபதி அம்மன் திருக்கல்யாண வைபவம்

திருத்தணி திரௌபதி அம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா். திருத்தணி காந்தி நகரில் உள்ள திரௌபதியம்மன் கோயிலில் தீமிதி விழா கடந்த மா... மேலும் பார்க்க

சா்வதேச ஆட்டிசம் தின விழிப்புணா்வு பேரணி -ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

திருவள்ளூா் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் நடைபெற்ற சா்வதேச ஆட்டிசம் தினத்தையொட்டி நடைபெற்ற விழிப்புணா்வு பேரணியை ஆட்சியா் மு.பிரதாப் தொடங்கி வைத்தாா். மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ... மேலும் பார்க்க