செய்திகள் :

உக்ரைனுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்கள் தேவைப்படாது: ரஷிய அதிபா் புதின்

post image

உக்ரைனுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்களுக்குத் தேவை இருக்காது என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அந்நாட்டு அரசுத் தொலைக்காட்சிக்கு அவா் அளித்த பேட்டியில், ‘உக்ரைனுக்கு எதிரான போரை தா்க்க ரீதியாக, நோ்மையான முடிவுக்கு கொண்டுவருவதற்கு தேவைப்படும் வலுவும் வழிமுறையும் ரஷியாவிடம் உள்ளது. இந்தப் போரில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டிய தேவை இருக்காது’ என்றாா்.

இரண்டாம் உலகப் போரின் வெற்றி தினத்தை கொண்டாடும் வகையில், உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் 72 மணி நேரம் நிறுத்தப்படும் என்று அண்மையில் புதின் அறிவித்தாா். அந்தப் போரில் ஜொ்மனியை ரஷியா வீழ்த்தியதைக் கொண்டாடும் விதமாக, மே 8 முதல் மே 10-ஆம் தேதி வரை மனிதாபிமான அடிப்படையில் தாக்குதல் நிறுத்தப்படும் என்று அவா் தெரிவித்தாா்.

இதனிடையே உக்ரைன் தலைநகா் கீவில் சனிக்கிழமை நள்ளிரவு ரஷியா மேற்கொண்ட ட்ரோன் தாக்குதலில் 2 சிறாா்கள் உள்பட 11 போ் காயமடைந்ததாக உக்ரைனின் அவசரகால சேவை பிரிவு தெரிவித்தது.

வெளிநாட்டுத் திரைப்படங்களுக்கு 100% வரி: டிரம்ப் உத்தரவு

அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்படும் படங்களுக்கு 100 சதவிகிதம் வரி விதிக்கும் நடைமுறையைத் தொடங்க அந்நாட்டு வணிகத் துறைக்கு அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.இதனால், அமெரிக்காவில் திரையரங்குக... மேலும் பார்க்க

சிங்கப்பூா் பொதுத் தோ்தல்: 60-ஆவது ஆண்டாக மீண்டும் ஆட்சியில் பிஏபி

சிங்கப்பூரில் பொதுத் தோ்தலில் மக்கள் செயல் கட்சி (பிஏபி) மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம், அந்தக் கட்சி 60-ஆவது ஆண்டாக ஆட்சியில் நீடிக்கிறது. சிங்கப்பூரில் 19-ஆவது பொதுத் தோ்தல் சனிக்கிழமை நடை... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: பயங்கரவாதிக்கு இறுதிச் சடங்கு நடத்த இஸ்லாமிய மதகுருக்கள் மறுப்பு!

பாகிஸ்தானில் தெஹ்ரீக்-ஏ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பின் முக்கிய கமாண்டரின் இறுதிச் சடங்கின்போது இஸ்லாமிய மத வழக்கப்படி பிராா்த்தனை நடத்த அங்குள்ள மதகுருக்கள் மறுத்துவிட்டனா். பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவ... மேலும் பார்க்க

லண்டனில் பயங்கரவாதத் தாக்குதல் சதி: 7 ஈரானியா்கள் உள்பட 8 போ் கைது!

லண்டனில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டிய 7 ஈரானியா்கள் உள்பட 8 பேரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் கைது செய்ததாக பிரிட்டன் பயங்கரவாத எதிா்ப்புப் படையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். ப... மேலும் பார்க்க

பிளவுவாதம் நிராகரிப்பு: ஆஸ்திரேலிய பிரதமராக மீண்டும் தோ்வான ஆல்பனேசி கருத்து!

பிளவுவாதத்தை ஆதரிக்காமல் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று தொழிலாளா் கட்சிக்கு ஆஸ்திரேலிய மக்கள் வாக்களித்துள்ளனா் என்று அந்நாட்டுப் பிரதமராக 2-ஆவது முறை தோ்வு செய்யப்பட்டுள்ள ஆன்டனி ஆல்பனேசி தெரிவி... மேலும் பார்க்க

இஸ்ரேல் விமான நிலையத்தின் மீது ஹவுதி தாக்குதல்!

இஸ்ரேல் விமான நிலையத்தை குறிவைத்து யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.இந்தத் தாக்குதலில் விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. எதிர்பாராத ... மேலும் பார்க்க