செய்திகள் :

`உக்ரைன் அதிபர் பதவியிலிருந்து விலகுங்கள்' - அமெரிக்க செனட்டர் பேச்சுக்கு ஜெலன்ஸ்கி-யின் பதில் என்ன?

post image

கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையே நடந்த காரசார விவாதத்தினால் உலகமே பரபரத்தது.

மூன்று ஆண்டுகள் கடந்தும் ரஷ்யா - உக்ரைன் போர் இன்னமும் நடந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை, அமெரிக்கா - உக்ரைன் இடையில் கனிம வள ஒப்பந்தத்தை கையெழுத்திட அமெரிக்காவிற்குச் சென்றிருந்தார் ஜெலன்ஸ்கி.

அங்கே அவருக்கும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிற்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை.

ஜெலன்ஸ்கி

இந்த நிலையில், அமெரிக்காவின் செனட் உறுப்பினரான லிண்ட்சே கிரஹாம், "உக்ரைன் அதிபர் பதவியில் இருந்து ஜெலன்ஸ்கி விலகினால்தான் போர் முடிவடையும்... உக்ரைனுக்கும் நல்லது நடக்கும்" என்று கூறியிருந்தார்.

இது குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், "லிண்ட்சே கிரஹாம் மிக நல்ல மனிதர். அவருக்கு என்னால் உக்ரைன் குடியுரிமை தர முடியும். அவர் உக்ரைன் குடிமகன் ஆனால், உக்ரைன் குறித்த அவருடைய கருத்து வலுப்பெறும். அவர் உக்ரைன் குடிமகன் ஆன பின்னர், உக்ரைன் பிரதமராக யார் இருக்கலாம் என்ற அவரின் கருத்தை கேட்கிறேன்" என்று பதிலளித்துள்ளார்.

TVK : தடதடக்கும் தூத்துக்குடி தவெக; ஓயாத புகார்கள்; வெடிக்கும் நிர்வாகிகள் - பின்னணி என்ன?

தூத்துக்குடி மாவட்டத்துக்கான நிர்வாகிகளை இன்னும் அறிவிக்கவில்லை தவெக தலைமை. அதிகாரப்பூர்வமாக மா.செக்களை அறிவிப்பதற்கு முன்பாக மாவட்டப் பொறுப்பாளர்களை நியமித்திருந்தார்கள். அதன்படி, தூத்துக்குடி மாவட்ட... மேலும் பார்க்க

Seeman: "எனக்கு நியாயம் கிடைக்கவில்லை; இதுதான் என் கடைசி வீடியோ" - சீமான் விவகாரத்தில் நடிகை

"இனிமேல் போராட்டம் செய்துகொண்டும், புகார் கொடுத்துக்கொண்டும் இருக்கப் போவதில்லை. இதுதான் எனது கடைசி வீடியோ" என்று சீமான் விவகாரம் குறித்து நடிகை வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருந்த... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பு: `தமிழ்நாட்டின் 39 இடங்கள் குறையாது என்கிறார்கள்; ஆனால்..!'- கனிமொழி சொல்வதென்ன?

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும் தி.மு.க துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மக்கள்தொகையின் அடிப்பட... மேலும் பார்க்க

`பொதுக் கூட்டத்துக்கு வாங்க; தங்க நாணயத்தோடு போங்க'- அதிமுக-வின் கவர்ச்சிகர அழைப்பு; வைரலான நோட்டீஸ்

ஒரு காலத்தில் தலைவர்களின் பேச்சைக் கேட்க கூட்டம் கூடியதுபோய், தற்போது, கூட்டத்துக்கு ஆட்களைச் சேர்க்கவே அரசியல் கட்சிகள் திணறிவருகின்றன. ஆடி ஆஃப்ர் போல் கவர்ச்சிகரமான பரிசுப் பொருள்களை வழங்கியும், பிர... மேலும் பார்க்க

வேலுமணி இல்ல திருமணம்: எடப்பாடி ஆப்சன்ட்... தமிழிசை, எல்.முருகனுடன் அண்ணாமலை பிரசன்ட்!

கோவை அதிமுக நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான எஸ். பி. வேலுமணி மகன் விஜய் விகாஸ் - தீக்‌ஷனா திருமணம் கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எம்... மேலும் பார்க்க

NEET: "நீட் ரகசியத்தை Daddy, son சொல்லணும்" - திண்டிவனம் மாணவி தற்கொலை விவகாரத்தில் இபிஎஸ் காட்டம்

நீட் தேர்வு குறித்த அச்சம் காரணமாக விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவ... மேலும் பார்க்க