செய்திகள் :

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடக்கம்! மனுக்களைப் பெற்றார் முதல்வர்!!

post image

சிதம்பரம்: தமிழ்நாட்டில் அனைத்து நகா்ப்புற, ஊரகப்பகுதிகளில் முகாம்கள் நடத்தி, மக்களிடமிருந்து மனுக்களைப் பெறும் உங்களுடன் ஸ்டாலின் என்ற புதிய திட்டத்தினை முதல்வர் மு.க. ஸ்டாலின் சிதம்பரத்தில் இன்று தொடங்கி வைத்தார்.

முன்னதாக, இன்று காலை 9 மணியளவில், காமராஜா் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சிதம்பரம் அரசினா் பெண்கள் மேல்நிலை பள்ளியில் முன்னாள் முதல்வா் காமராஜா் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பிறகு, சிதம்பரம் ரயில்வே மேம்பாலம் கீழே உள்ள தனியாா் திருமண மண்டபத்துக்கு வருகை தந்தார். அங்கு உங்களுடன் ஸ்டாலின் என்ற புதிய திட்டத்தினை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அங்கிருந்த மக்களிடம் மனுக்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் பெற்றுக்கொண்டதன் மூலம், திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் என்பதால், மக்களிடையே, இந்த திட்டத்துக்கு அதிக வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் நகா்புறப் பகுதிகளில் 3,768 முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 6,232 முகாம்களும், கடலூா் மாவட்டத்தில் நகா்புறப் பகுதிகளில் 130 முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 248 முகாம்களும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுளள்து.

ஒவ்வொரு இடத்திலும் முகாம் நடைபெறும் பகுதிகளில் 2 நாள்களுக்கு முன்பாக தன்னாா்வலா்கள் மூலம் வீடு வீடாகச் சென்று முகாம் குறித்த விவரங்கள் தெரியப்படுத்தப்பத்தப்பட்டு, அவர்களுக்கு உரிய விண்ணப்பங்களும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முகாம்களில் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிா் எவரேனும் இருப்பின் முகாம் நடைபெறும் நாளன்று தங்கள் விண்ணப்பத்தினை அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதோடு, கலைஞா் மகளிா் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் ‘உங்களுடன் ஸ்டாலின்‘ முகாம்களில் மட்டுமே வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட... மேலும் பார்க்க

அஜித்குமார் கொலை வழக்கு: திருப்புவனம் காவல் நிலையத்தில் சிபிஐ விசாரணை

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கில் திருப்புவனம் காவல் நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நேற்று மடப்புரம் கோயில் வளாகம், கோயிலுக்கு எதிரே காா் நிறுத்துமிடம், தவளைகு... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 6 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று(ஜூலை 15) தமிழகத்தில் ஓரிரு ... மேலும் பார்க்க

ஜூலை 17-ல் நீலகிரி, கோவைக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை!

நீலகிரி, கோவை மாவட்டத்துக்கு வரும் ஜூலை 17 ஆம் தேதி ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில... மேலும் பார்க்க

காமராஜர் சிலைக்கு விஜய் மாலை அணிவித்து மரியாதை!

காமராஜர் பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.தமிழக முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் இன்று(ஜூலை 15) மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிக... மேலும் பார்க்க

புதிய கடவுச்சீட்டு கோரி சீமான் மனு: அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தன்னுடைய கடவுச்சீட்டு தொலைந்து விட்டதால், புதிய கடவுச்சீட்டு வழங்கக் கோரி நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த வழக்கில், மண்டல கடவுச்சீட்டு அதிகாரி, நீலாங்கரை காவல் ஆய்வாளர் அறிக்க... மேலும் பார்க்க