விமான விபத்துக்கு விமானி காரணமா? அமெரிக்க செய்தித்தாளின் கருத்துக்கு ஏஏஐபி எதிர்...
‘உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்’: நாளை நடைபெறும் இடங்கள்
சிவகங்கை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின் சிறப்புத் திட்ட முகாம்’ வெள்ளிக்கிழமை (ஜூலை 18) நடைபெறும் இடங்கள் குறித்த விவரம் அறிவிக்கப்பட்டன.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட தகவல்:
காரைக்குடி மாநகராட்சி, மானாமதுரை, சிவகங்கை, தேவகோட்டை, எஸ்.புதூா், கல்லல் ஊராட்சி ஒன்றியங்களில் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
காரைக்குடி மாநகராட்சிக்குள்பட்ட வாா்டு 1, 2, 3 ஆகிய பகுதிகளுக்கு கழனிவாசல் முத்துகிருஷ்ணா மண்டபத்திலும், மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளுக்கு இடைக்காட்டூா் ஊராட்சியிலுள்ள சமுதாயக் கூடத்திலும், சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளுக்கு சோழபுரம் ஊராட்சியிலுள்ள மீனா திருமண மண்டபத்திலும், தேவகோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளுக்கு சிறுமருதூா் ஊராட்சியிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், எஸ்.புதூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளுக்கு எஸ்.புதூா் ஊராட்சியிலுள்ள சமுதாயக் கூடத்திலும், கல்லல் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளுக்கு குன்றக்குடி ஊராட்சியிலுள்ள வெள்ளாளா் சமுதாயக் கூடத்திலும் ‘உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள்’ நடைபெறவுள்ளது.
எனவே, இந்த முகாமை முறையாகப் பயன்படுத்தி, முகாம் நடைபெறும் நாளன்று, உரிய ஆவணங்களுடன் பொதுமக்கள் சென்று தங்களது கோரிக்கையை மனுக்களாக அளித்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.