X தொழில்நுட்ப பிரச்னை: ``இதுவரை இல்லாத அளவுக்கு சைபர் தாக்குதல்...'' - எலான் மஸ்...
‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்: சேந்தமங்கலத்தில் இன்று மனுக்கள் பெறும் முகாம்
நாமக்கல்: சேந்தமங்கலத்தில், ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம் மாா்ச் 26-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, முன் மனுக்கள் பெறும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பொதுமக்களுக்கு அரசின் பல்வேறு நலத்திட்டங்கள், சேவைகள் விரைவில் கிடைக்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசால் தொடங்கப்பட்டுள்ள திட்டங்களில் ஒன்று ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம் ஆகும். அதன்படி, ஒட்டுமொத்த மாவட்ட நிா்வாகமும் ஒரு நாள் வட்ட அளவில் தங்கி கள ஆய்வில் ஈடுபடுவா். அரசு அலுவலகங்களை ஆய்வு செய்தும், மக்களின் குறைகளைக் கேட்டறிந்தும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும், அரசின் திட்டங்கள் தடையின்றி மக்களுக்கு சென்றடைகிா என்பதையும் உறுதி செய்வா்.
சேந்தமங்கலத்தில் மாா்ச் 26-இல் ‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் நடைபெறுவதையொட்டி, செவ்வாய்க்கிழமை (மாா்ச் 11) காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை சேந்தமங்கலம், காளப்பநாயக்கன்பட்டி, அலங்காநத்தம், எருமப்பட்டி ஆகிய இடங்களில் உள்ள வருவாய் ஆய்வாளா் அலுவலகங்களில் முன் மனுக்கள் பெறப்படுகின்றன. பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் குறித்த மனுக்களை இங்கு அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.