செய்திகள் :

உங்கள் போன் ஒட்டுக் கேட்கப்படுகிறதா? விளம்பரங்களும், அதன் டிஜிட்டல் மார்க்கெட்டிங் தொழில்நுட்பமும்!

post image

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், ஸ்மார்ட்போன்கள் ஸ்மார்ட்போன்கள் நம் வாழ்வின் ஒரு அங்கமாக, நம் உடல் உறுப்பைப் போல மாறிவிட்டன. நம்மைப் பற்றி நமக்கே தெரியாத தகவல்களைக் கூட அது அறிந்து வைத்திருக்கிறது. சில சமயங்களில் நமது தனிப்பட்ட தகவல்களைக் கூட அதனிடமிருந்தே கேட்டுத் தெரிந்து கொள்ளும் நிலையில்தான் இருக்கிறோம். அந்த அளவிற்கு நமது பயன்பாட்டிற்காக இருந்த ஸ்மார்ட்போன்கள், இப்போது தகவல்களை சேகரிக்கும் ராட்சத சாதனமாக மாறிவருவது அச்சத்தை ஏற்படுத்துகின்றன. ஸ்மார்ட்போன்கள் உளவாளியைப் போல நாம் பேசுவதை எந்நேரமும் ஒட்டுக் கேட்டுக் கொண்டே இருக்கிறதா? என்ற அச்சம் பரவியிருக்கிறது.

பேசினாலே வரும் விளம்பரங்கள்

சட்டை வாங்குவதைப் பற்றி நண்பர்களிடம் பேசினால் உடனே சமூகவலைதளமெங்கும் சட்டை பற்றிய விளம்பரங்கள் வருகின்றன. எந்தவொரு பொருள்களைப் பற்றி பேசினாலும், அதுதொடர்பான விளம்பரங்கள் நம் ஸ்மார்ட்போன்களைக் கிழித்துக் கொண்டு வந்துவிடுகின்றன. இதுதான் நாம் ஸ்மார்ட்போன்கள் மூலம் ஒட்டுக் கேட்கப்படுகிறாமா? என்ற அச்சைத்தைப் பரவச் செய்திருக்கிறது.

ஒவ்வொரு நிறுவனங்களும் தங்கள் பொருள்களை மக்களிடம் கொண்டு சேர்க்கப் பல டிஜிட்டல் மார்க்கெட்டிங் யுக்திகளைப் பயன்படுத்தி வருகின்றன. ஸ்மார்ட்போனில் இயங்கும் செயலிகள் மூலம் தகவல்களை அறிந்துகொண்டு, அதன்மூலம் சமூகவலைதளங்களில் விளம்பரங்களைக் கொடுக்கப்படும் பெரும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் தொழில்நுட்பம் இன்று அசுரத்தனமாக வளர்ந்து நிற்கிறது.

ஸ்மார்ட்போன்கள் ஒட்டுக் கேட்படுகிறதா?

'Siri, Google Assistant, Alexa' போன்ற குரல் மூலம் இயங்கும் செயலிகளில் மைக் எப்போது இயக்கத்திலேயே இருக்கின்றன. அதன் மூலம் நாம் பேசுவதெல்லாம் பதிவாகின்றதா என்று கேட்டால் அதை மறுக்கின்றன தொழில்நுட்ப நிறுவனங்கள். ஆனால், சில செயலிகள் இந்த மைக்கைப் பயன்படுத்தி நாம் பேசுவதைப் பதிவு செய்யவில்லை என்றாலும், பேசும்போது பயன்படுத்தும் சில வார்த்தைகளை மட்டும் எடுத்துக் கொண்டு, அதன் அடிப்படையில் விளம்பரங்களைக் கொடுக்கின்றன.

நீங்கள் பேசும் உரையாடலில் சில பிராண்ட்களின் பெயர்கள், சட்டை, கார், பைக், காலணிகள் போன்ற பொருள்களின் வார்த்தைகள் இருந்தால் அதை மட்டும் பிடித்துக் கொண்டு, அதுதொடர்பான விளம்பரங்கள் வருகின்றன. போனைப் பயன்படுத்தினால் மட்டுமல்ல போனை அருகில் வைத்துவிட்டு நம்முடன் இருப்பவர்களிடம் பேசினால்கூட, அந்த உரையாடல் மூலம் விளம்பரங்கள் வருவதையெல்லாம் பார்த்திருகிறோம்.

'Siri, Google Assistant, Alexa' போன்ற குரல் மூலம் இயங்கும் செயலிகளில் மை எப்போது இயக்கத்திலேயே இருப்பதால் நம் ஸ்மார்ட்போன்கள் ஒட்டுக் கேட்கப்படுவதற்கான எல்லா சாத்தியங்களும் எளிதாக இருக்கின்றன என்றுதான் கூறவேண்டும்.

அதேபோல கூகுளில் நாம் தேடும் வார்த்தைகள், சமுகவலைதளங்களில் நாம் பயன்படுத்தும் வார்த்தைகள், இணையத்தில் நாம் செல்லும் இணையதளங்கள் போன்ற பல்வேறு இணைய, சமூகவலைதள செயல்பாடுகளின் தகவல்கள் மற்றும் 'cookies' மூலம் விளம்பரங்கள் வருகின்றன.

'Wifi, Bluetooth, GPS' பயன்பாடுகள் மூலமும் தகவல்கள் சேகரிக்கப்பட்டு அதற்கேற்ப விளம்பரங்கள் வருகின்றன. நீங்கள் எந்த இடத்திற்குச் செல்கிறீர்களோ அந்த இடத்தில் இருக்கும் கடைகளுக்குகேற்ப விளம்பரங்கள் வருகின்றன. சில பெரு நிறுவனங்களின் கடைகளில் 'Wifi, Bluetooth' மூலம் விளம்பரங்களை கடத்தும் தொழில்நுட்பக் கருவிகளையும் பொருத்தியிருக்கின்றன.

தனிப்பட்ட தகவல்கள் திருட்டு

ஸ்மார்ட்போன்களில் இருக்கும் தனிப்பட்ட தகவல்களை திருடுவது, அதை மார்க்கெட்டிங்கிற்காகப் பயன்படுத்துவது, ஸ்மார்ட்போன்களை ஒட்டுக் கேட்பது, தனிப்பட்ட தகவல்களை விற்பது உள்ளிட்டவை சட்டப்படி குற்றம். GDPR (யூரோப்), CCPA (அமெரிக்கா) போன்ற சட்டங்களை மிக பெரிய அளவில் மீறுவதாகும்.

விளம்பரங்களுக்காகத் தனிப்பட்ட தகவல்களை கசியவிட்டதற்காக ஆப்பிள் siri, அமேசான், கூகுள், மெட்டா, எக்ஸ் உள்ளிட்ட பல பெருநிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு, பெரும் அபராதமும் விதிக்கப்பட்டிருகின்றன.

பெரு நிறுவனங்கள் தனிப்பட்ட தகவல்களை திருடுவதில்லை என்று கூறினாலும், ஸ்மார்ட்போனில் அதை எடுப்பதற்காக எல்லா வழிகளும் வழங்கப்பட்டிருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தி தனிப்பட்ட தகவல்களை சட்டத்திற்குப் புறம்பாகச் சேகரித்து விற்பதற்கு பல 'Data Selling Broker' நிறுவனங்களும் ரகசியமாக செயல்பட்டு வருகின்றன.

தனிப்பட்ட நபருக்கு மட்டுமல்ல, தேசத்தின் பாதுகாப்பிற்கே ஆபத்து

தனிப்பட்ட தகவல்களை திருடுவது தனிப்பட்ட நபருக்கு மட்டும் ஆபத்தல்ல, அது தேசத்தின் பாதுகாப்பிற்கே ஆபத்தானது. இந்த தனிப்பட்ட டிஜிட்டல் தகவல்கள் திருட்டு அரசு, இராணுவத்தில் பணியாற்றுபவர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பயன்படுத்தி பெரும் குற்றங்களில் ஈடுபடவும், நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்துகிறது. தனிப்பட்ட டிஜிட்டல் தகவல்களை விளம்பரத்திற்காக மட்டுமல்ல சில தீவிரவாதிகள் தீவிரவாத செயல்களுக்கும் பயன்படுத்துக் கொள்வது மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துவத்துவதாக இருக்கின்றன.

தப்பிக்க வழியே இல்லையா!

இதிலிருந்து தப்பிக்க வழியே இல்லையா என்று கேட்டால் இருக்கின்றன.

- தேவையற்ற செயலிகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் மைக் அனுமதியை ரத்து செய்யுங்கள்.

-எப்போதும் இயக்கத்தில் இருக்கும் 'Siri, Google Assistant, Alexa' உள்ளிட்ட குரல் மூலம் இயங்கும் செயலிகளின் மைக் அனுமதியை ரத்து செய்யுங்கள்.

-Google, Facebook, Instagram மற்றும் ஸ்மார்போனில் அமைப்பு உள்ளிட்டவற்றில் இயக்கத்தில் 'Ad personalization' அமைப்பைபின் அனுமதியை ரத்து செய்துவிடுங்கள்.

-தகவல்களின் பாதுக்காப்பை முடிந்த அளவிற்கு பாதுகாப்பாக வைத்திருக்கும் 'Browser'-களைப் பயன்படுத்துங்கள். (Brave, DuckDuckGo) இப்போதைக்குப் பாதுகாப்பாகக் கருதப்படுகிறது.

-App Permissions செட்டிங்ஸில் வழங்கப்பட்டிருக்கும் தேவையில்லாத அனுமதிகளை ரத்து செய்து விடுங்கள்.

-பாதுகாப்பான செயலியை இன்ஸ்டால் செய்யுங்கள். ஒவ்வொரு செயலியை இன்ஸ்டால் செய்யும்போது தேவையற்ற அனுமதிகளைக் கொடுப்பதைத் தவிர்த்துவிடுங்கள். (Microphone, Location, Contacts, Camera, Phone/SMS)

- சமூகவலைதளங்களில் தேவையற்ற விளம்பரங்கள் வந்தால் உடனே அதை 'irrelevant' என 'Block' செய்துவிடுங்கள்.

- இணையதளங்கள், சமூகவலைதளங்கள், செயலிகள் கேட்கும் தேவையற்ற கேள்விகளுக்கு பதிலளிக்காதீர்கள். உங்களின் தனிப்பட்ட தகவல்கள் குறித்த கேள்விகளுக்குப் பதிலளிக்காதீர்கள்.

-முக்கியமாக உங்கள் தொலைபேசி எண், Mail முகவரியை தேவையற்ற இடங்களில், கடைகளில், இணையதளங்களில் கொடுப்பதைத் தவிர்த்துவிடுங்கள்.

தனிப்பட்ட தகவல்களை முடிந்த அளவிற்கு ஸ்மார்ட்போனில் பதிவு செய்வதை தவிர்த்துவிடுங்கள் என்பதே தொழில்நுட்ப வல்லுநர்களிம் அதிகபட்ச அறிவுரையாக இருக்கிறது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Walker S2: தானாக பேட்டரி மாற்றும் திறன் கொண்ட ரோபோ; சீன நிறுவனம் அசத்தல்; எப்படிச் செயல்படும்?

சீனாவைச் சேர்ந்த UBTECH ரோபோட்டிக்ஸ் என்ற நிறுவனம், மனிதர்களின் பங்களிப்பு இல்லாமல் 24 மணி நேரமும் வாரத்தில் ஏழு நாட்களும் தானாகவே இயங்கக்கூடிய, தானாக பேட்டரி மாற்றும் திறன் கொண்ட மனித உருவ ரோபோவை அறி... மேலும் பார்க்க

Instagram: புதிய ஆட்டோ ஸ்க்ரோல் அம்சம்; இன்ஸ்டாகிராமில் எப்படி பயன்படுத்துவது? | Auto-scroll

இன்ஸ்டாகிராம் தனது பயனர்களுக்கு மேலும் வசதியான அனுபவத்தை வழங்க, ரீல்ஸுக்கான புதிய ஆட்டோ ஸ்க்ரோல் அம்சத்தை சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சம் பயனர்கள் ஸ்க்ரோல் செய்யாமலே ரீல்ஸை தொடர... மேலும் பார்க்க

`வீக்' பாஸ்வெர்டால் இழுத்து மூடப்பட்ட நிறுவனம்; ஹேக்கர்களால் வேலையிழந்த 700 பேர்! - என்ன நடந்தது?

இங்கிலாந்து நிறுவனம் ஒன்றை ஹேக்கர்கள் `ஹேக்' செய்ததால், கிட்டத்தட்ட 700 ஊழியர்கள் வேலையை இழந்திருக்கின்றனர். 158 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இங்கிலாந்து போக்குவரத்து நிறுவனம் KNP Logistics. இந்த நிறுவனத்தி... மேலும் பார்க்க

Candy Crush: விரைவாக செயல்பட `AI'-ஐ உருவாக்கியவர்கள் வேலை இழந்து தவிப்பு.. அதிர்ச்சியில் ஊழியர்கள்

கிங் என்பது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் கீழ் செயல்படும் ஒரு கேமிங் ஸ்டூடியோ. உலகப் புகழ்பெற்ற கேண்டி க்ரஷ் (Candy Crush) விளையாட்டுகள் இவர்களால் உருவாக்கப்பட்டது. இந்த ஸ்டூடியோவில் பணியாற்றும் ஊழியர்கள... மேலும் பார்க்க

ChatGPT down: இன்று காலை முதல் திடீரென வேலை செய்யாமல் இடைநிறுத்தமானது Chat GPT!

உலகமுழுவதும் சுமார் 800 மில்லியன் பயன்பாட்டாளர்களைக் கொண்ட கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் டான் டான் என்று பதில் சொல்லும் ஓபன் AI நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவான செயலியான 'Chat GPT' இன்று காலை முதல் திடீ... மேலும் பார்க்க

மொபைல் போன் தொலைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்?- சிம் கார்டு மோசடிகளைத் தவிர்ப்பது எப்படி? | Depth

தினமும் ஆயிரக்கணக்கான போன்கள் திருடப்படுகின்றன அல்லது தொலைந்து போகின்றன. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் Sanchar sathi ( சஞ்சார் சாதி) என்ற செயலியை கடந்த மே மாதம்... மேலும் பார்க்க