செய்திகள் :

உங்கள் வன்மம் எங்களை ஒன்றும் செய்யாது: முதல்வர் ஸ்டாலின்

post image

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினை விமரிசனம் செய்து வார பத்திரிகை ஒன்றில் கேலிச்சித்திரம்(கார்ட்டூன்) வெளியாகியுள்ள நிலையில், பல ஆண்டுகால வன்மத்தால் என்னை விமரிசனம் செய்து கேலிச்சித்திரம் வெளியிடுவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

என்னை, அமைச்சர்களை விமரிசனம் செய்து வெளியிட்டுள்ள கேலிச்சித்திரத்தால் என சிரிப்பு வரவில்லை, பரிதாபமாகதான் இருந்தது. பக்திதான் அவர்களது நோக்கம் எனில் ஆன்மீகத்திற்கு அரசு செய்த நன்மைகளை பட்டியலிட்டிருக்கலாம் என தெரிவித்தார்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் அருள்மிகு கபாலீசுவரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில், பொருளாதாரத்தில் பின்தங்கிய 32 இணைகளுக்கு திருமணம் நடத்தி வைத்து, மணமக்களை வாழ்த்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

திருமணம் செய்து கொண்ட 32 இணைகளுக்கும் 4 கிராம் தங்கத் தாலி உள்பட ரூ.60 ஆயிரம் மதிப்பிலான சீர்வரிசைகள் வழங்கப்பட்டது.

பின்னர் பேசிய முதல்வர் ஸ்டாலின், அரசு துறைகளிலேயே நான் இந்து அறநிலையத்துறை நிகழ்ச்சியில்தான் அதிகம் பங்கேற்கிறேன். அறநிலையத்துறை சார்பில் 2,376 இணையர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இதில் 150 திருமணங்களுக்கு நானே தலைமையேற்று நடத்தி வைத்துள்ளேன். இன்று ஓரே நாளில் 576 திருமணங்கள் நடத்தி வைத்து அந்த குடும்பங்களில் வாழ்வில் ஒளியேற்றியுள்ளது இந்து அறநிலையத்துறை. திராவிட மாடல் ஆட்சியில் 4 ஆண்டுகளில் இந்து அறநிலையத்துறை மகத்தான வளர்ச்சியை பெற்றுள்ளது.

பக்தர்கள் போற்றக்கூடிய அரசு

பக்தர்கள் போற்றக்கூடிய அரசாக திராவிட மாடல் ஆட்சி திகழ்கிறது. எந்த ஆட்சியிலும் இல்லாத அளவுக்கு 3,177 கோயில்களுக்கு குடமுழுக்கு, 997 திருக்கோயில்களுக்கு சொந்தமான 7,650 ஏக்கர் நிலங்கள் மீட்பு, ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 26 ஆயிரம் கோயில்களில் திருப்பணிகள், 1000 ஆண்டுகள் பழமையான கோயில்கள் தொன்மை மாறாமல் புனரமைக்க ரூ.425 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.

அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தை செயல்படுத்தி இதுவரை 29 பயிற்சி பெற்ற அரச்சகர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. 12 பெண் ஓதுவார்கள் உள்பட 46 ஓதுவார்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. அன்னைத் தமிழில் வழிபாடு செய்யும் திட்டத்தை 295 கோயில்களில் செயல்படுத்தியுள்ளோம்.

பல ஆண்டுகால வன்மம்

என்னை, அமைச்சர்களை விமரிசனம் செய்து வார பத்திரிகை ஒன்றில் கேலிச்சித்திரம்(கார்ட்டூன்) வெளியாகியுள்ளது. அதை பார்த்து எனக்கு சிரிப்பு வரவில்லை, பரிதாபமாகதான் இருந்தது. பக்திதான் அவர்களது நோக்கம் எனில் ஆன்மீகத்திற்கு அரசு செய்த நன்மைகளை பட்டியலிட்டிருக்கலாம். ஆனால் அவர்களது நோக்கம் அது அல்ல, பல ஆண்டுகால வன்மம் அது. அந்த வன்மத்துக்கு வடிகால்தான் இதுபோன்ற கேலிச்சித்திரம்.

அவதூறுகளை கண்டு கவலைப்படுவதில்லை

வன்மத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்டும் இந்த அவதூறுகளை கண்டு ஒருபோதும் நான் கவலைப்படுவதில்லை. இவையெல்லாம் எங்களுக்கு ஊக்கம்தான் அளிக்கிறது. திருநாவுக்கரசர் மொழிக்கேற்ப, என் கடன் பணி செய்து கிடப்பதே! என்று மக்களுக்காக செயலாற்றுவோம். நாம் உண்மையான பக்தர்களின் நலனுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம். உண்மையான பக்தர்கள் நமது ஆட்சியின் ஆன்மிக தொண்டை பாராட்டுகிறார்கள் என்றார்.

இதையும் படிக்க | போலீஸ் தாக்கியதில் பலியான அஜித் குமாரின் தம்பிக்கு அரசுப்பணி!

Summary

Chief Minister Stalin has said that he is criticizing me and publishing a caricature because of years of malice

கும்பகோணத்தில் விநாயகர் கோயிலை இடிக்க முயற்சி: மக்கள் முற்றுகை போராட்டம்

கும்பகோணம்: கும்பகோணத்தில் விநாயகர் கோயிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் வியாழக்கிழமை அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஒன்றியத்தில் உள்ள உள்ளூர்... மேலும் பார்க்க

பாமக எம்எல்ஏ அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை: ராமதாஸ்

விழுப்புரம்: பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து சேலம் மேற்குத் தொகுதி எம்எல்ஏ அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை என்று கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்... மேலும் பார்க்க

விளை நிலங்களுக்கு மத்தியில் வீட்டுமனைப் பிரிவுகள்: ராமதாஸ் கண்டனம்

ரியல் எஸ்டேட் என்ற பெயரில், விளை நிலங்களுக்கு மத்தியில் வீட்டுமனைப் பிரிவுகளை கட்டமைக்கும் வேலைகள் தொடங்கப்பட்டிருப்பது ஆபத்தான போக்கு. அது எந்நாளும் ஏற்புக்குரியது அல்ல என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவ... மேலும் பார்க்க

திருப்பதியில் தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்

திருப்பதி: திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோயில் அருகே உள்ள கடையில் நள்ளிரவு ஏற்பட்ட மின் கசிவால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமானது.ஆந்திரம் மாநிலம... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர்: நான்கு நாள்களுக்குப் பிறகு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடிக்கு கீழே குறைந்தது.காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை தணிந்ததால் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து காவிரியின் வெள... மேலும் பார்க்க

மியான்மரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1 ஆகப் பதிவு

மியான்மரில் வியாழக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.1 அலகுகளாகப் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.தேசிய நில அதிர்வு மைய அறிக்கையின் படி, மியான்மரில் வ... மேலும் பார்க்க