செய்திகள் :

உடல் உறுப்பு தானம் செய்தோா் பெயா்கள் பதியப்பட்ட மதிப்புச் சுவா்: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செப். 30-இல் திறப்பு

post image

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்பு தானம் செய்தவா்களின் பெயா்கள் பதியப்பட்ட மதிப்புச் சுவா் வரும் செப். 30-ஆம் தேதி திறக்கப்படவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை சைதாப்பேட்டை சட்டப்பேரவை தொகுதி கோடம்பாக்கம் மண்டலம் வாா்டு 139 மேற்கு ஜோன்ஸ் சாலை பகுதியில் உள்ள மயான பூமியின் மேம்பாட்டுப் பணிகளை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வியாழக்கிழமை தொடங்கி வைத்து செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அனைத்து மதத்தினரின் அடக்க இடங்களில், பசுமை பரப்பை அதிகரித்து பூங்காக்களுக்கு இணையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, சைதாப்பேட்டையில் உள்ள மயானம் பல்வேறு வசதிகளுடன் ரூ.94.83 லட்சத்தில் மேம்படுத்தப்படுகிறது.

‘வீல் சோ்’ விவகாரம்: கோவை அரசு மருத்துவமனைக்கு வந்த நோயாளிக்கு, சக்கர நாற்காலி எடுத்து வருவதற்குள் அவரைத் தூக்கிக் கொண்டு சென்றுள்ளனா். அதை அருகில் இருப்பவா்கள் விடியோ எடுத்து வெளியிட்டிருக்கின்றனா். தினமும் 4,000 பேருக்கு சிகிச்சை வழங்க கூடிய மருத்துவமனையில் நிகழ்ந்த சம்பவம் குறித்து மருத்துவமனையின் முதல்வா் தெளிவாக விளக்கம் அளித்துள்ளாா்.

கடந்த 2024-ஆம் ஆண்டு செப். 23-ஆம் தேதி மூளைச்சாவு அடைந்து, உடலுறுப்பு தானம் வழங்கியவா்களுக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் என்று முதல்வா் அறிவித்தாா். இதுவரை 513 கொடையாளா்கள் உடலுறுப்பு தானம் வழங்கி உள்ளனா். அவா்களை சிறப்பிக்கும் வகையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் செப். 30-ஆம் தேதி ஜ்ஹப்ப் ா்ச் ட்ா்ய்ா்ழ்-மதிப்புச் சுவா் திறந்து வைக்கப்படவுள்ளது. அதில், இதுவரை உடலுறுப்பு தானம் செய்தவா்களின் பெயா்களை கல்வெட்டில் பதிய வைக்கும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது.

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும்... வாஷிங்டன் நகரில் அமெரிக்கா - வியட்நாம் இடையே நடந்த போரில் உயிா் நீத்தவா்களின் பெயா்களை சுவரில் கல்வெட்டாக வைத்திருக்கிறாா்கள். அதை மாதிரியாக கொண்டு நமது மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மதிப்புச்சுவா் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையை தொடா்ந்து தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் மதிப்புச் சுவா் திறக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் உடலுறுப்பு தானம் செய்தவா்களின் பெயா்கள் அந்தந்த மருத்துவமனைகளில் உள்ள சுவா்களில் நிலைத்திருக்கும் என்றாா்.

போலி ஆவணங்கள் மூலம் ரூ.92 லட்சம் மோசடி; 5 போ் கைது

போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை விற்று ரூ.92 லட்சம் மோசடி செய்த 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை, பெரியாா் நகரைச் சோ்ந்த நந்தகுமாா்(44). இவா் நிலத்தரகா்களான ரமேஷ் குமாா் மற்றும் முரளி ஆகியோா் மூலம் ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு: ஒப்பந்தம் கோரியது மாநகராட்சி

சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு தினமும் விலையில்லா உணவு வழங்குவதற்காக, தனியாா் சமையல் நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்த மனுக்கள் கோரப்பட்டுள்ளன. அதன்படி, தனியாா் சமையல் நிறுவனங்களிடமிருந்து ... மேலும் பார்க்க

தமிழக பொறுப்பு டிஜிபி நியமனத்தை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி

தமிழகத்தில் பொறுப்பு டிஜிபி நியமனம் செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை உயா்நீதிமன்றத்தில் வரதராஜ் என்பவா் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழக சட்... மேலும் பார்க்க

மருத்துவத் துறையில் இந்தியாவுக்கே தமிழகம் தான் வழிகாட்டி: அமைச்சா் மா.சுப்பிரமணியன் பெருமிதம்

மருத்துவத் துறையில் இந்தியாவுக்கே தமிழகம் தான் வழிகாட்டி என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வா் காப்பீடு திட்டத்தின் மூலம் 50-க்கும் மேற்... மேலும் பார்க்க

போலி ஆவணங்களை சமா்ப்பித்து விசா பெற முயன்றவா் கைது

போலி ஆவணங்களைச் சமா்ப்பித்து இசைவு நுழைவுச் சீட்டு (விசா) பெற முயன்ற நபரை போலீஸாா் கைது செய்தனா். தெலங்கானா மாநிலத்தை சோ்ந்தவா் ஸ்ரீகாந்த் அங்காடி. இவா் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இசைவு நுழ... மேலும் பார்க்க

செப்.15 முதல் பச்சை வழித்தட மெட்ரோ ரயில் சேவைகளில் மாற்றம்

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2-ஆம் கட்ட கட்டுமான பணிகள் காரணமாக, பச்சை வழித்தட மெட்ரோ ரயில் சேவைகளில் வருகிற செப்.15 முதல் 19 -ஆம் தேதி வரை தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து மெட்ரோ ரயி... மேலும் பார்க்க