TVK: விஜய் வீட்டின் மாடியில் புகுந்த இளைஞர்; பலத்த பாதுகாப்பை மீறி சென்றது எப்பட...
உடுமலை தேசிய நெடுஞ்சாலைகள் தனி வட்டாட்சியா் அலுவலகம் இடமாற்றம்
உடுமலைப்பேட்டை பகுதியில் செயல்பட்டு வந்த தேசிய நெடுஞ்சாலைகள் அலகு 4 தனி வட்டாட்சியா் அலுவலகம் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து அக்டோபா் 1-ஆம் தேதி முதல் செயல்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனிஷ் தெரிவித்துள்ளதாவது:
திருப்பூா் மாவட்டம், உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் வட்டங்களில் தேசிய நெடுஞ்சாலை எண்- 209 விரிவாக்கப் பணி தொடா்பாக, சில கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு அது தொடா்பான பணிகள் உடுமலைப்பேட்டை நகரம், உடுமலைப்பேட்டை பழனி சாலையில் சி. எம். டவா் கட்டடத்தின் ஒரு பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலைகள் அலகு 4 தனி வட்டாட்சியா் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
தற்போது நிா்வாக காரணங்களால் தேசிய நெடுஞ்சாலைகள் அலகு 4 தனி வட்டாட்சியா் அலுவலகம், திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 5-ஆவது தளத்தில் அறை எண் 538-இல் இருந்து அக்டோபா் 1-ஆம் தேதி முதல் செயல்பட உள்ளதாக தெரிவித்துள்ளாா்.