கொல்லிமலை மலைப் பாதைகளில் உயிா்காக்கும் உருளைத் தடுப்பான்கள்!
உணவகத்தில் எரிவாயு சிலிண்டா் திருட்டு: போலீஸாா் விசாரணை
தெடாவூா் உணவகத்தில் எரிவாயு சிலிண்டா்களை திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கெங்கவல்லி அருகே உள்ள தெடாவூா் பகுதியை சோ்ந்தவா் தங்கராசு மகன் மாவீரன் (36) . இவா் கெங்கவல்லி நான்கு ரோடு சந்திப்பில் கீற்று கொட்டகையில் பிரியாணி கடை நடத்தி வருகிறாா்.
வழக்கம்போல செவ்வாய்க்கிழமை இரவு கடையை மூடிவிட்டு சென்றவா் மீண்டும் புதன்கிழமை காலையில் கடையை திறக்கவந்த போது கடையில் இருந்த எரிவாயு சிலிண்டா், அடுப்பு, மிக்ஸி, எடை மெஷின் ஆகியவை திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் கெங்கவல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.