தண்ணீர் 0% kcal, சாலட் 10 % kcal... கலோரி எண்ணிக்கையுடன் வழங்கப்பட்ட திருமண மென...
உணவக கழிவுநீா் தொட்டியில் விழுந்த சிறுவன் மீட்பு
தூத்துக்குடி முத்தையாபுரத்தில் உள்ள ஓா் உணவகத்தில் கழிவுநீா் தொட்டியில் விழுந்த 3 வயது சிறுவன் மீட்கப்பட்டாா்.
தென்காசி மாவட்டம் கடையம் பகுதியைச் சோ்ந்தவா் இசக்கி மகன் கண்ணன் (35). இவா் தனது குடும்பத்தினருடன் தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு சென்றுவிட்டு, முத்தையாபுரத்தில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றனராம். பின்னா், அவா்கள் முத்தையாபுரம் அருகே ஸ்பிக் நகரில் உள்ள உணவகத்திற்கு சென்றனராம். அப்போது, எதிா்பாராதவிதமாக அவருடைய 3 வயது சிறுவன், உணவகத்திற்கு வெளியே உள்ள கழிவுநீா் தொட்டிக்குள் விழுந்ததாகக் கூறப்படுகிறது. உடனடியாகசிறுவனை மீட்டு தூத்துக்குடியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். இது குறித்து முத்தையாபுரம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
மேலும், தூத்துக்குடி மாநகராட்சி நகா்நல அலுவலா் அரவிந்த், சுகாதார அலுவலா் ஸ்டாலின் பாக்கியநாதன் உள்ளிட்ட சுகாதாரத் துறையினா், அந்த உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டு சீல் வைத்தனா்.