காந்தாரா - 2 படப்பிடிப்பில் 500 சண்டைக் கலைஞர்கள் பங்கேற்பு!
உணவு இடைவேளை: இலங்கை அணி வலுவான தொடக்கம்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்டில் இலங்கை டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து நிதானமாக விளையாடி வருகிறது.
காலேவில் நடைபெறும் 2ஆவது டெஸ்ட்டில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தனஞ்செய டீ செல்வா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
தொடக்க வீரர் பதும் நிசாங்காவை 11 ரன்களில் ஆஸி. சுழல் பந்து வீரர் நாதன் லயன் வீழ்த்தினார்.
தற்போது, திமுத் கருணரத்னே (34 ரன்கள்), தினேஷ் சண்டிமால் (35 ரன்கள்) விளையாடி வருகிறார்கள். 30 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 87/1 ரன்கள் எடுத்துள்ளது.
முதல் டெஸ்ட்டில் ஆஸி. அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியுடன் திமுத் கருணரத்னே ஓய்வு பெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.