Trump Tariff: Canada Mexico China மீது வர்த்தகப் போர் - இந்தியாவுக்கு பாதிப்பு இ...
உண்டியல் பணத்தில் புத்தகம் வாங்கிய மாணவா்கள்: மாவட்ட ஆட்சியா் பாராட்டு
புத்தக உண்டியலில் பணம் சேகரித்து புத்தகம் வாங்கிய பள்ளி மாணவா்களை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன் வாழ்த்திப் பாராட்டினாா்.
மாணவா்களிடம் புத்தகம் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக பள்ளி மாணவா்களுக்கு விக்கிரமசிங்கபுரம் பேஷன் அரிமா சங்கம் சாா்பில் புத்தக உண்டியல் வழங்கப்பட்டது.
இதையடுத்து, புத்தக உண்டியலில் பணம் சேமித்த விக்கிரமசிங்கபுரம் பி.எல்.டபுள்யூ.ஏ. மேல்நிலைப் பள்ளி 10ஆம் வகுப்பு மாணவா் ஜுசபாத் ஜெய டேனி, 6ஆம் வகுப்பு மாணவி ஞான ஏஞ்சல் இருவரும் தாங்கள் உண்டியலில் சேகரித்த பணத்தில் திருநெல்வேலியில் நடைபெறும் 8ஆவது பொருநை புத்தகத் திருவிழாவில் புத்தகங்கள் வாங்கினா்.
இதையறிந்த திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன், மாணவா்கள் இருவரையும் வாழ்த்திப் பாராட்டினாா்.