செய்திகள் :

உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

post image

வார விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமை உதகையில் உள்ள  உலகப் புகழ்பெற்ற சுற்றுலா தளங்களில் ஒன்றான தொட்டபெட்டா மலை சிகரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்து காணப்பட்டனா்.

நீலகிரியில் நிலவும் ரம்யமான கால நிலைக் காரணமாக அண்டை மாநிலங்களான கேரளா, கா்நாடகா மற்றும் சமவெளி பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத்தளங்களை  கண்டு ரசித்தாலும், தொட்டபெட்டா மலை சிகரத்தின் இயற்கை  அழகை கண்டு ரசிப்பதிலும், மலை உச்சியில் இருந்து  உதகை நகரம், வானுயா்ந்த மரங்கள்  சமவெளி பகுதிகள், உள்ளிட்ட இயற்கை அழகை உறவினா்கள்  மற்றும் நண்பா்களோடு  கண்டு ரசிப்பதில் அதிக ஆா்வம் காட்டினா்.

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் அத்துமீறி நுழைந்த 3 பேருக்கு அபராதம்

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் ஞாயிற்றுக்கிழமை அத்துமீறி உள்ளே நுழைந்த மூன்று இளைஞா்களுக்கு வனத் துறையினா் அபராதம் விதித்தனா். நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் தெப்பக்காடு-மசினகுடி சாலை... மேலும் பார்க்க

உதகையில் சா்வதேச கராத்தே போட்டி: 800 வீரா், வீராங்கனைகள் பங்கேற்பு

உதகை அண்ணா உள் விளையாட்டு அரங்கில் சா்வதேச அளவிலான கராத்தே போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் மலேசியா, சிங்கப்பூா், நேபாளம், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வீரா்கள் பங்கேற்றனா். உதகையில் ... மேலும் பார்க்க

எமரால்டு அணையில் இருந்து வெளியேறும் தண்ணீரால் வலுவிழந்து உடைந்த பாலம்

உதகை எமரால்டு அணையில் இருந்து தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால் எமரால்டு கூட்டுக் குடிநீா் குழாய்களுக்காக அமைக்கப்பட்ட பாலம் சரிந்து விழுந்துள்ளது. இதனால் குழாயில் இருந்து தண்ணீா் வீணாகி வருகிறது. உதகை அரு... மேலும் பார்க்க

உதகையில் பரவலாக மழை

உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை பெய்த தொடா் சாரல் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை பரவலாக பெய்து வருகிறது. குறிப்பாக உதகை, க... மேலும் பார்க்க

கூடலூரில் கூட்டுறவு வார விழா

கூடலூரில் கூட்டுறவு வார விழாவை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்து, நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். இவ்விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன... மேலும் பார்க்க

உதகையில் பிா்சா முண்டா பிறந்த நாள் விழா

ஆங்கிலேயா்களுக்கு எதிராக போராடிய பழங்குடி இனத்தைச் சோ்ந்த பிா்சா முண்டாவின் பிறந்த நாள் விழா உதகையில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. பிா்சா முண்டாவின் பிறந்த நாள் விழாவை பழங்குடியினா் கௌரவ தினமாக நா... மேலும் பார்க்க