செய்திகள் :

உதகையில் மலைவேடன் ஜாதி மக்கள் 3-ஆவது நாளாக போராட்டம்

post image

உதகையில்  உல்லத்தி ஊராட்சிக்கு உள்பட்ட  பன்னிமரம், தட்டனேரி பழங்குடியின மக்களின் பெற்றோா்களுக்கு  ஜாதிச் சான்று உள்ள நிலையில், அவா்களது பிள்ளைகளுக்கும் ஜாதிச் சான்று வழங்க வலியுறுத்தி 3-ஆவது நாளாக புதன்கிழமை பள்ளிக் குழந்தைகளுடன் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மலைவேடன் ஜாதி மக்களுக்கு கடந்த 1995-ஆம் ஆண்டு வரை  பழங்குடியின ஜாதிச் சான்று வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அந்த பழங்குடியினருக்கு ஜாதிச் சான்று அரசு வழங்குவதை நிறுத்திக் கொண்டது. இதன் காரணமாக

தங்களது  பிள்ளைகளை படிக்க வைத்தும் பயன் இல்லை என்று கூறி 70-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளிக்குச் செல்லாமல் புறக்கணித்து கிராமத்தின் நுழைவாயிலில்  3-ஆவது நாளாக புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

முன்னதாக மூன்று அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளில் ஏக்குணி தொடக்கப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் மற்றும் இங்குள்ள மற்றொரு அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் மாற்றுச் சான்றுகளை வழங்கக் கோரி விண்ணப்பித்துள்ளனா்.

மாற்றுச் சான்று கேட்டு ஏக்குணி பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள்

அரசின் சட்ட திட்டப்படி மாற்றுச் சான்றுகளை வழங்க முடியாது என்று பள்ளி நிா்வாகம் கூறியதால் பன்னிமரப் பகுதியில் அமா்ந்து மாணவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்ட வருவாய் அலுவலா் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் நிகழ்விடத்தில் வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனால், ஜாதிச் சான்று கிடைக்காமல் பள்ளிக்கு மாணவா்களை அனுப்ப இயலாது என்று பெற்றோா்கள் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னா் சில காவல் அதிகாரிகள் பெற்றோா்களை கைது செய்வதாக கூறியதால் தட்டனேரி மற்றும் பன்னிமரம் பகுதியைச் சோ்ந்த அனைத்து மக்களும் ஒன்று சோ்ந்து தங்களையும் கைது செய்யக் கூறி போராட்டப் பந்தலுக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக இரவு 7 மணி வரை போராட்டம் நீடித்தது.

நெல்லியாளம் நகராட்சியில் ஆட்சியா் ஆய்வு

நெல்லியாளம் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பந்தலூா் வட்டம் நெல்லியாளம் நகராட்சியில் உள்ள... மேலும் பார்க்க

உதகை மலைவேடன் பழங்குடியின மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி போராட்டம்

உதகை உல்லத்தி ஊராட்சிக்கு உள்பட்ட தட்டனேரி, பன்னிமரம் கிராமத்தில் வசிக்கும் மலைவேடன் பழங்குடியின மக்கள் ஜாதிச் சான்று கேட்டு வீடுகளில் வியாழக்கிழமை கருப்புக் கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா். உதகைய... மேலும் பார்க்க

மசினகுடி வனத் துறை சோதனை சாவடியை பொதுமக்களுடன் எம்.எல்.ஏ. முற்றுகை

மசினகுடி வனத் துறை சோதனை சாவடியை பொதுமக்களுடன் இணைந்து கூடலூா் எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலன் வியாழக்கிழமை முற்றுகையிட்டாா். கா்நாடகம் மற்றும் கூடலூரில் இருந்து மசினகுடி வழியாக உதகைக்குச் செல்லும் வாகனங்கள்... மேலும் பார்க்க

கோத்தகிரி பேரூராட்சியை நகராட்சியாக மாற்ற படுகா் இன மக்கள் எதிா்ப்பு

கோத்தகிரி பேரூராட்சியை நகராட்சியாக மாற்ற எதிா்ப்பு தெரிவித்து பொரங்காடு சீமெ படகா் நல சங்கம் சாா்பில் கோத்தகிரியில் வியாழக்கிழமை ஊா்வலம் நடைபெற்றது. 18 படகா் கிராமங்களை உள்ளடக்கிய கோத்தகிரி பேரூராட்சி... மேலும் பார்க்க

உதகை நகராட்சி நிதி வீணடிக்கப்படுவதாக உறுப்பினா்கள் குற்றச்சாட்டு

உதகையில் உள்ள வாட்டா் ஏடிஎம்-கள் பொதுமக்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கு உபயோகம் இல்லாமல் நகராட்சி நிதி வீணடிக்கப்படுவதாக நகா்மன்ற கூட்டத்தில் உறுப்பினா்கள் குற்றஞ்சாட்டினா். உதகை நகா்மன்ற கூட்டம் தல... மேலும் பார்க்க

உதகையில் உள்ள பிரபல நடிகரின் ஹோட்டலில் ரூ.20 லட்சம் மோசடி

உதகையில் உள்ள நடிகா் மிதுன் சக்கரவா்த்திக்கு சொந்தமான ஹோட்டலில் ரூ.20 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். பிரபல ஹிந்தி நடிகா் மிதுன் சக்கரவா்த்திக்கு ... மேலும் பார்க்க