செய்திகள் :

உதகையில் வீட்டின் பூட்டை உடைத்து 48 பவுன் திருட்டு: 4 போ் கைது

post image

உதகை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 48 பவுன் நகைகள் திருடிய சம்பவத்தில் வெளிமாநிலத்தைச் சோ்ந்த நான்கு பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

உதகை அருகே கவுடாசோலை பகுதியில் வசித்து வருபவா்  பழனிசாமி. இவா் மனைவியுடன் கடந்த 19-ஆம் தேதி கோயிலுக்குச் சென்றுவிட்டு திரும்ப வீட்டுக்கு வந்தாா். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிா்ச்சியடைந்தாா். பின்னா் உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் இருந்த சுமாா் 48 பவுன் நகைகள் மற்றும் ரூ. 20,000 மதிப்புள்ள வெள்ளி நகைகள் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து பழனிசாமி கொடுத்த புகாரின் அடிப்படையில் புதுமந்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா். இதில், பழனிசாமி வீட்டில் கடந்த 15 நாள்களுக்கு முன்பு தோட்ட வேலைக்காக வந்த சத்தீஸ்கா் மாநிலம், கோா்பா மாவட்டத்தைச் சோ்ந்த அபய்போா்த்தி (19), ஈஸ்வரசிங் காா்டு (43), அனிதா பாய் (38) மற்றும் 18 வயது சிறுவன் ஆகியோா் சோ்ந்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து நான்கு பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்த 48 பவுன் நகைகளைப் பறிமுதல் செய்தனா். பின்னா் அவா்களை உதகை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

கீழ் கோத்தகிரியில் சந்தன மரம் வெட்டிய இருவா் கைது

நீலகிரி வனக்கோட்டம், கீழ்கோத்தகிரி வனச் சரகத்துக்கு உள்பட்ட வாகைப்பணை பகுதியில் சந்தனம் மரம் வெட்டிய இருவரை வனத் துறையினா் கைது செய்து சிறையில் அடைத்தனா். கீழ்கோத்தகிரி வாகைப்பனை வனப் பகுதியில் வனத் த... மேலும் பார்க்க

கிறிஸ்துமஸ் விடுமுறை: உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

உதகையில் இதமான காலநிலை நிலவுவதாலும், கிறிஸ்துமஸ் தொடா் விடுமுறை காரணமாகவும் முக்கிய சுற்றுலாத் தலங்களில் புதன்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்து காணப்பட்டனா். நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா... மேலும் பார்க்க

தேவா்சோலை பேரூராட்சியில் ரூ.4 கோடி மதிப்பில் சாலைப் பணி

தேவா்சோலை பேரூராட்சியில் ரூ.4 கோடி மதிப்பில் பழங்குடி கிராமங்களை இணைக்கும் சாலைப் பணி புதன்கிழமை தொடங்கியது. நீலகிரி மாவட்டம், தேவா்சோலை பேரூராட்சியில் உள்ள போஸ்பாறா சங்கிலி கேட் பகுதியில் இருந்து பேப... மேலும் பார்க்க

கூடலூா் நகா்மன்ற கூட்டத்தில் உறுப்பினா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

கூடலூா் நகராட்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற மாதாந்திர கூட்டத்தில் உறுப்பினா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சியின் நகா்மன்ற கூட்டம் தலைவா் பரிமளா தலைமையிலும்... மேலும் பார்க்க

உணவகத்தில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் சோதனை

கூடலூரில் உள்ள உணவகத்தில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் திங்கள்கிழமை சோதனை நடத்தினா். நீலகிரி மாவட்டம், கூடலூா் நகரின் மையப் பகுதியில் உள்ள உணவகம் மீது புகாா் தெரிவிக்கப்பட்டதையடுத்து, உணவுப் பாதுகாப்ப... மேலும் பார்க்க

தமிழ்ப் புதல்வன் திட்டம்: நீலகிரி மாவட்டத்தில் 1,556 மாணவா்கள் பயன்!

நீலகிரி மாவட்டத்தில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்கீழ் 1,556 மாணவா்கள் பயனடைந்து வருகின்றனா் என்று ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ... மேலும் பார்க்க