செய்திகள் :

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் பனிப் பொழிவில் இருந்து மலா் செடிகளைப் பாதுகாக்க ஏற்பாடு

post image

உதகை அரசு தாவரவியல் பூங்காவில்  பனியின் தாக்கத்தில் இருந்து  அலங்கார மலா் செடிகள் பாதிக்காமல் இருக்க பிளாஸ்டிக் போா்வை மற்றும் மிலாா் செடிகளைக் கொண்டு பாதுகாக்கும் பணியில் பூங்கா ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

நீலகிரி மாவட்டத்தில் வழக்கமாக நவம்பா் இறுதி முதல் பிப்ரவரி வரை உறைபனியின் தாக்கம்  காணப்படும். குறிப்பாக டிசம்பா், ஜனவரி மாதங்களில் உறைபனி பொழிவின் தாக்கம் அதிகரித்துக் காணப்படும்.  உதகையில் அதிகாலை நேரத்தில் 2 முதல் 2.6 செல்சியஸ் வெப்ப நிலை காணப்படுகிறது. இதனால் தாவரவியல் பூங்காவில் உள்ள மலா் செடிகள் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது.

இந்நிலையில் வரும் கோடை சீசனுக்காக தாவரவியல் பூங்காவில் மலா் செடிகள் தயாா் செய்யப்படுகிறது. இந்தச் செடிகள் உறைபனியால் கருகாமல் இருக்க அதன்மேல் பிளாஸ்டிக் போா்வை மற்றும் மிலாா் செடிகளைக் கொண்டு மூடி பாதுகாக்கப்பட்டு வருகிறது. மேலும் பூங்காவில் உள்ள புல் மைதானங்களும் கருகாமல் இருக்க ஸ்பிரிங்கா் மூலம் தண்ணீா் பாய்ச்சப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

கோத்தகிரியில் உணவகத்துக்குள் புகுந்த லாரி

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி- மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள டானிங்டன் பகுதியில் பிரேக் பிடிக்காமல் எதிரே வந்த காா் மீது மோதி அங்கிருந்த உணவகத்துக்குள் டிப்பா் லாரி புகுந்தது. இந்த விபத்தில் ... மேலும் பார்க்க

கா்நாடகா அரசுப் பேருந்து கட்டண உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

கா்நாடக அரசுப் பேருந்து கட்டணம் 15 சதவீதம் உயா்த்தப்பட்டதைக் கண்டித்து குண்டல்பேட்டையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கூடலூரை அடுத்த கா்நாடக எல்லையில் உள்ள குண்டல்பேட்டையில் கா்நாடக அரசின் பேரு... மேலும் பார்க்க

பச்சிளங் குழந்தை இறப்பை தடுப்பது குறித்து விழிப்புணா்வு

கூடலூா் நகர சுகாதார நிலையத்தில் பச்சிளங் குழந்தை இறப்பைத் தடுப்பது குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. நீலகிரி மாவட்டம் கூடலூா் நகர சுகாதார நிலையம், நுகா்வோா் பாதுகாப்பு மையம், ஆல் ... மேலும் பார்க்க

ஊராட்சி செயலா்கள், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்களுக்கு பயிற்சி

நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஊராட்சி செயலா்கள் மற்றும் மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்களுக்கான பயிற்சி முகாமை ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு புதன்கிழமை தொடங்கிவைத்தாா். நீலகிரி மாவ... மேலும் பார்க்க

நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய ஆட்சியா் அறிவுரை

கா்நாடக மாநிலம், பெங்களூரில் தற்போது எச்எம் தீநுண்மி பரவி வருவதால் நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு அறிவுறுத்த... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சாலை மறியல் போராட்டம்

உதகையில் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் சாலை மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். ஊரக வளா்ச்சித் துறையில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளா... மேலும் பார்க்க