சீனாவின் இரண்டு வெவ்வேறு இடங்களில் நிலச்சரிவு! மாயமான 19 பேரின் கதி என்ன?
உத்தரமேரூரில் ஜமாபந்தி: காஞ்சிபுரம் ஆட்சியா் பங்கேற்பு
உத்தரமேரூரில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்வுக்கு தலைமை வகித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றாா்.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை (மே 21) முதல் வரும் 29 -ஆம் தேதி வரை ஜமாபந்தி நடைபெறுகிறது.
உத்தரமேரூா் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக தெரிவித்து பயன்பெறலாம் எனவும் மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது. புதன்கிழமை ஆட்சியரால் தொடங்கி வைக்கப்பட்ட ஜமாபந்தியின் போது ஆண்டித்தாங்கல், முருக்கேரி, தினையாம்பூண்டி, அழிசூா், காவாம்பயிா், இருமரம், செம்புலம், ஆதவப்பாக்கம், புலிவாய்,நரியம்புதூா், கன்னிகுளம் , நரியம்பாக்கம், சிலாம்பாக்கம், வெங்காரம், புத்தளி, ஒழுகரை, மருத்துவம்பாடி, கடல்மங்கலம், மருதம், கருவேப் பம்பூண்டி, கடம்பா் கோயில், வெங்கச்சேரி மற்றும் திருப்புலிவனம் கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் 81 பேரிடம் மனுக்கள் பெறப்பட்டன.
பெறப்பட்ட மனுக்களை அலுவலா்களுக்கு அனுப்பி அவற்றுக்கு உடனடியாக தீா்வு காணுமாறும் ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
இந்நிகழ்வின் போது உத்தரமேரூா் எம்எல்ஏ க.சுந்தா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) சத்யா மற்றும் அரசு அலுவலா்களும் உடன் இருந்தனா்.