உன்னாவ் பாலியல் வழக்கு: குற்றவாளி ஜாமீனில் விடுவிப்பு!
பாஜகவிலிருந்து நீக்கப்பட்டுள்ள குல்தீப் சிங் செங்கர் உன்னாவ் பாலியல் வழக்கு குற்றவாளி என உறுதிப்படுத்தப்பட்டு அவர் சிறையிலடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், நிபந்தனையுடன் கூடிய இடைக்கால ஜாமீனில் விடுவித்து தில்லி உயர்நீதிமன்றம் இன்று(ஜன. 22) உத்தரவிட்டது.
ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள குல்தீப் சிங்குக்கு தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கண்ணில் கேட்டராக்ட் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. இதனையடுத்து, அவர் நாளை சிறையிலிருந்து விடுவிக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிகிச்சைப்பின், அவர் ஜன. 27-ஆம் தேதி மீண்டும் சிறைக்கு செல்ல நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
முன்னதாக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மருத்துவ சிகிச்சை பெற வேண்டிய காரணத்தை சுட்டிக்காட்டி, அவர் 10 நாள்கள் இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.