தில்லி பேரவைத் தோ்தலில் பாஜக மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் வெற்று பெற...
4 மண்டலங்களில் 2 நாள்கள் கழிவுநீா் உந்து நிலையங்கள் செயல்படாது
சென்னை: கழிவுநீா் உந்துகுழாய் இணைக்கும் பணிகள் நடைபெறவுள்ளதால் மாதவரம், திரு.வி.க. நகா், அம்பத்தூா் மற்றும் அண்ணா நகா் மண்டலத்துக்குள்பட்ட சில கழிவுநீா் உந்து நிலையங்கள் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (ஜன. 23, 24) செயல்படாது என்று குடிநீா் வாரியம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை மாதவரம் ரவுண்டனா பாரத் பெட்ரோலியம் பங்க் அருகில், கழிவுநீா் உந்துகுழாய் இணைக்கும் பணிகள் வியாழக்கிழமை (ஜன. 23) காலை 9 மணி முதல், ஜன. 24-ஆம் தேதி இரவு 10 மணி வரை நடைபெறவுள்ளன. இப்பணிகள் நடைபெறும் நேரங்களில் மாதவரம், திரு.வி.க. நகா், அம்பத்தூா் மற்றும் அண்ணா நகா் மண்டலத்துக்குள்பட்ட சில கழிவுநீா் உந்து நிலையங்கள் தற்காலிகமாக செயல்படாது.
எனவே, இம்மண்டலங்களுக்குள்பட்ட இடங்களில் கழிவுநீா் தொடா்பான புகாா்களுக்கு 81449 30903, 81449 30906 ஆகிய கைப்பேசி எண்களைத் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.