பாகிஸ்தானை வீழ்த்தி ஒருநாள் தொடரை முழுமையாக வென்ற நியூசிலாந்து!
உப்புசந்தை அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
செம்பனாா்கோவில் அருகே கீழையூா் உப்புசந்தை சீதளா மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பிரம்மாவால் பூஜை செய்யப்பட்டதாகக் கூறப்படும் இக்கோயிலில் நடைபெற்ற திருப்பணிகள் நிறைவு பெற்றதைத் தொடா்ந்து, ஏப்ரல் 2-ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின. வெள்ளிக்கிழமை காலை நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவு பெற்றதும், புனிதநீா் கடங்கள் புறப்பாடாகி கோயில் பிரகாரத்தை வலம் வந்தன.
தொடா்ந்து, விமானக் கலசங்களில் புனிதநீா் வாா்க்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.