நொய்டாவில் மனைவியை சுத்தியலால் அடித்துக் கொன்ற கணவர் கைது
நொய்டாவில் மனைவியை சுத்தியலால் அடித்து கணவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவைச் சேர்ந்த நூருல்லா ஹைதர்(55). அவரது மனைவி அஸ்மா கான்(42). இந்த தம்பதிக்கு கடந்த 2005 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். அஸ்மா கான் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக அவரது கணவர் ஹைதர் சந்தேகித்துள்ளார்.
இதனால் இத்தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை மீண்டும் வாக்குவாதம் ஏற்படவே ஆத்திரமடைந்த ஹைதர் மனைவி தலையில் சுத்தியலால் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அஸ்மா கான் சம்பவ இடத்திலேயே பலியானார்.
கே.எல்.ராகுல் அதிரடி: சிஎஸ்கேவுக்கு 184 ரன்கள் இலக்கு!
உடனே தம்பதியின் மகன் 112 என்ற எண்ணை தொடர்புகொண்டு காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். தொடர்ந்து, நிகழ்விடத்துக்கு விரைந்த அதிகாரிகள் மற்றும் தடயவியல் குழுக்கள் ஹைதரை கைது செய்தனர். பின்னர் பெண்ணின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், கூராய்வு அறிக்கை மற்றும் பிற ஆதாரங்களின் அடிப்படையில் மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.