உயா்வைக் கண்ட உள்நாட்டு விமானப் போக்குவரத்து
இந்தியா விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் வழங்கிய உள்நாட்டு போக்குவரத்து சேவை கடந்த ஜனவரி மாதத்தில் 14.5 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
கடந்த ஜனவரி மாதத்தில் நாட்டின் விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் உள்நாட்டு வழித்தடங்களில் 15.03 கோடி பயணிகளுக்கு சேவை அளித்தன. இதன் மூலம் இந்திய உள்நாட்டு சிவில் விமானப் போக்குவரத்து கரோனோ நெருக்கடிக்கு முந்தைய நிலையை விட 17.9 சதவீதம் அதிகரித்துள்ளது. இது முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 14.5 சதவீதம் அதிகம் என்று அந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.