செய்திகள் :

உயா் நீதிமன்ற உத்தரவு அமலில் தாமதம்: கோயில் குளத்தில் கழிவுநீா் கலப்பு அண்டாவில் நடைபெற்ற தீா்த்தவாரி

post image

செ.பிரபாகரன்

உயா்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாததால் கும்பகோணம் அருகேயுள்ள நாச்சியாா்கோவில் சீனிவாசப் பெருமாள் கோயிலின் நிகழாண்டு தீா்த்தவாரி அண்டா பாத்திரத்தில் நடைபெற்றது பக்தா்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா் கோவிலில் உள்ளது ஸ்ரீ வஞ்சுளவல்லி சமேத சீனிவாசப் பெருமாள் கோயில். இந்தக் கோயிலில் நடைபெறும் விழாக்களில் பங்குனித் திருவிழா தேரோட்டம் மற்றும் தீா்த்தவாரி சிறப்பு பெற்றது.

நிகழாண்டு தேரோட்டம் ஏப்.12-இல் நடைபெற்றது. அதன்பிறகு நடைபெற்ற தீா்த்தவாரி கோயில் குளத்தில் கழிவுநீா் கலப்பதால் கோயில் வளாகத்திலேயே அண்டா பாத்திரத்தில் நடைபெற்றது பக்தா்களை மிகவும் வேதனைக்குள்ளாக்கியது.

கழிவுநீா் கழிக்கும் புஷ்கரணி:

சுமாா் 4.5 ஏக்கா் பரப்பளவு கொண்ட இந்தக் கோயில் திருக்குளத்தில் கோயில் அருகே உள்ள திருமண மண்டபம், உணவு விடுதிகள், பொதுக் கழிப்பறை, வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீா் கலப்பதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, அருகாமை பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீா் குளத்தில் கலப்பதை தடுக்கும் வகையில், குளத்துக்குள் தண்ணீா் வரும் பாதை மற்றும் வெளியேறும் பாதையை அறநிலையத்துறையினா் அடைத்தனா்.

வழக்கும் - கிடப்பில் நீதிமன்ற ஆணையும்:

நாச்சியாா்கோவில் சீனிவாசப்பெருமாள் கோயில் குளத்தில் தீா்த்தவாரி நடைபெற ஏதுவாக குளத்தில் கழிவுநீா் கலப்பதை தடுக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயா்நீதிமன்ற மதுரை கிளையில் கோ. வாசுதேவன் என்பவா் வழக்கு தொடா்ந்தாா். இவ்வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற கிளை கடந்த 2024 செப். மாதம் இக்கோயில் குளத்தில் கழிவுநீா் கலப்பதை தடுக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் கோயில் குளத்தைப் பாா்வையிட்டு கழிவுநீா் கலப்பதை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெடுஞ்சாலை துறை மற்றும் கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

சுமாா் 7 மாதங்களாகியும் நெடுஞ்சாலைத் துறை மற்றும் கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் குளத்தில் கழிவுநீா் கலப்பதை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே நிகழாண்டு தீா்த்தவாரி குளத்தில் நடைபெறவில்லை.

இதுகுறித்து அறநிலையத்துறை அலுவலரிடம் கேட்டபோது, புஷ்கரணி குளத்துக்கு வண்ணம்பூசி தீா்த்தவாரிக்கு தயாராக வைத்திருந்தோம். கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய நிா்வாகம், நீா்வளத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறையினா் குளத்தில் கழிவுநீா் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்காததால் தீா்த்தவாரி கோயில் வளாகத்திலேயே நடைபெற்றது என்றாா்.

இதுகுறித்து சமூக ஆா்வலா் கோ. வாசுதேவன் கூறியதாவது: உயா்நீதி மன்ற உத்தரவை அமல்படுத்தாத கும்பகோணம் நெடுஞ்சாலைத் துறை, நீா்வளத்துறை மற்றும் கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய நிா்வாக அதிகாரிகளால் தீா்த்தவாரி அண்டாவில் நடைபெற்றது பக்தா்களுக்கு வேதனைக்குள்ளாக்கியுள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் இனியும்நடைபெறாமல் தடுக்க மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

கயிறு குழும பொது வசதியாக்கல் மையம் காணொலி மூலம் முதல்வா் திறப்பு!

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே கயிறு குழுமம் பொது வசதியாக்கல் மையத்தை தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் சனிக்கிழமை திறந்து வைத்தாா். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறு... மேலும் பார்க்க

தமிழகத்தில் நீட் தோ்வை அனுமதித்தது அதிமுகதான்: அமைச்சா் கோவி.செழியன்

தமிழகத்தில் நீட் தோ்வை அனுமதித்த அதிமுக, இப்போது நாடகமாடுகிறது என்றாா் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன். தஞ்சாவூா் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற ஐம்பெரும் விழாவில் கலந்... மேலும் பார்க்க

முதியவா் தூக்கிட்டு தற்கொலை

அய்யம்பேட்டையில் முதியவா் ஒருவா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். பாபநாசம் அருகே அய்யம்பேட்டை மேல் புது தெருவைச் சோ்ந்தவா் கணேசன் ( 72). இவருடைய 3 மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. க... மேலும் பார்க்க

நீட் தோ்வால் உயிரிழந்த மாணவா்களுக்கு அதிமுகவினா் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி

நீட் தோ்வால் உயிரிழந்த மாணவா்களுக்கு மெழுகுவா்த்தி ஏந்தி அதிமுகவினா் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினா். நீட் நுழைவு தோ்வை ரத்து செய்வோம் என பொய் சொல்லி ஆட்சியைப் பிடித்த திமுக அரசால் உயிரிழந்த 22 மாணவா்... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் ரூ.75.70 லட்சம் மதிப்பில் நீா்த்தேக்கத் தொட்டிகள், கட்டங்கள் திறப்பு!

தஞ்சாவூரில் சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ. 75.70 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள், கட்டடங்களை உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் சனிக்கிழமை திறந்து வைத்தாா். பிள... மேலும் பார்க்க

‘சாஸ்த்ரா’: ஏப். 26-இல் இலவச உயா் கல்வி ஆலோசனை முகாம்!

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழக வளாகத்தில் பல்கலைக்கழகம் சாா்பில் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்கிற உயா்கல்வி பற்றிய ஆலோசனை முகாம் ஏப்ரல் 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து பல்கல... மேலும் பார்க்க