செய்திகள் :

உயிரைக் காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநருக்கு நன்றி தெரிவித்த சைஃப் அலிகான்

post image

மும்பை: கொள்ளையரால் கத்தி குத்து தாக்குதலுக்கு உள்ளான தன்னை மருத்துவமனைக்கு அழைத்து சென்று உயிரை காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநர் பஜன்சிங் ராணாவை அழைத்து நடிகர் சைஃப் அலி கான் நன்றி தெரிவித்தார்.

கடந்த 16-ஆம் தேதி வங்கதேச இளைஞரால் தனது வீட்டில் கத்தியால் குத்தப்பட்ட நடிகர் சைஃப் அலி கான், வீட்டிலிருந்து வெளியே தப்பி வந்ததும் அந்த வழியாக வந்த ஆட்டோவில் ஏறி மும்பை, லீலாவதி மருத்துவமனைக்குச் சென்றார்.

மருத்துவமனையில் இறக்கிவிடும் வரையில் அவர் நடிகர் சைஃப் அலிகான் என்பதே ராணாவுக்கு தெரியவில்லை என்றும் அவர் பயணத்துக்கான கட்டணத்தைக் கூட பெறவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் முன் பஜன்சிங் ராணாவை மருத்துவமனைக்கு அழைத்து நடிகர் சைஃப் அலி கான் சந்தித்து நன்றி தெரிவித்தார். எப்போது உதவி தேவைப்பட்டாலும் செய்து தருவதாக நடிகர் சைஃப் அலி கான் உறுதியளித்தார்.

இதுகுறித்து ஆட்டோ ஓட்டுநர் பஜன் சிங் ராணா கூறியதாவது:

நடிகர் சைஃப் அலி கானும் அவரது குடும்பத்தாரும் நன்றி தெரிவித்தனர். சைஃப் அலி கான் தனது தாயார் ஷர்மிளா தாகுரை எனக்கு அறிமுகப்படுத்தினார். அவரது தாயார் என்னை ஆசிர்வதித்தார். அந்நேரத்தில் எனக்கு சன்மானம் தந்து பாராட்டினர். எப்போது உதவி தேவைப்பட்டாலும் அதை செய்து தருவதாக சைஃப் அலி கான் தெரிவித்தார் என்றார்.

கபில் சர்மா, பாலிவுட் பிரபலங்களுக்கு பாகிஸ்தானில் இருந்து கொலை மிரட்டல்!

பாலிவுட் நடிகர்கள் கபில் சர்மா, ராஜ்பால் யாதவ் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களுக்கு பாகிஸ்தானில் இருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து, 4 பாலிவுட் பிரபலங்களுக்கு பலத்த பாதுகாப்பு அளித்த... மேலும் பார்க்க

பஞ்சாப் எல்லைக்கு அருகே 2 ட்ரோன்கள் மீட்பு

அமிருதசரஸ்: பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே 2 ஆளில்லா விமானம் (ட்ரோன்களை) எல்லை பாதுகாப்புப் படையினரால் (பிஎஸ்எஃப்) மீட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.வரும் 26-ஆம் தேதி குடியரச... மேலும் பார்க்க

மகாராஷ்டிர ரயில் விபத்து: பலி 13-ஆக உயர்வு!

மகாராஷ்டிரத்தில் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக பரவிய வதந்தியால் அவசரமாக கீழே இறங்கிய பயணிகள் மீது மற்றொரு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.உத்தர பிரதேச மாநிலம், லக்னெளவில் இரு... மேலும் பார்க்க

மன்மோகன் சிங், ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா?

மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தொழிலதிபர் ரத்தன் டாடா ஆகியோரின் பெயர்கள் இந்தாண்டுக்கான பாரத ரத்னா விருதுப் பட்டியலில் முதன்மையாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தியக் குடிமக்களுக்கு வழங்... மேலும் பார்க்க

டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் திரும்பப் பெறப்படுமா?

நமது சிறப்பு நிருபர் புது தில்லி: மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியுடனான ஆலோசனைக்குப் பிறகு அதிகாரபூர்வ முடிவு அறிவிக்கப்படும் என ம... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்த மசோதா: ஜேபிசி கூட்டத்தை ஜன.30, 31-இல் நடத்த ஆ.ராசா வலியுறுத்தல்

நமது சிறப்பு நிருபர்புது தில்லி: வக்ஃப் திருத்த மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தை அவசரகதியில் ஜன. 24, 25 ஆகிய தேதிகளில் நடத்தாமல் ஜன.30, 31 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று அக... மேலும் பார்க்க