செய்திகள் :

`உயிர், உரிமை பிரச்னைகளை தமிழ்நாடு எதிர்கொண்டிருக்கிறது; நாம் ஒன்றுபட்டு போராட வேண்டும்!' - ஸ்டாலின்

post image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் மார்ச் 3ஆம் தேதி தனது 71வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் வீடியோ ஒன்றை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அதில் பேசியிருக்கும் ஸ்டாலின், "பொதுவாக நான் பிறந்தநாளைப் பெரிய அளவில் ஆடம்பரமாக - ஆர்ப்பாட்ட விழாவாகக் கொண்டாடுவது இல்லை. ஆனால், கழக உடன்பிறப்புகள் மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்குவது, கழக அரசின் சாதனைகள் மற்றும் கழகக் கொள்கைகளை எடுத்துச் சொல்லும் பொதுக்கூட்டங்கள் நடத்துவது என்று செயல்படுவார்கள். இந்த முறை என்னுடைய பிறந்தநாள் வேண்டுகோளாக என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு ஒரு கோரிக்கையை முன்வைக்கிறேன். இன்றைக்குத் தமிழ்நாடு தன்னுடைய உயிர்ப் பிரச்னையான மொழிப்போரையும் - தன்னுடைய உரிமைப் பிரச்னையான தொகுதி மறுசீரமைப்பையும் எதிர்கொண்டுள்ளது.

ஸ்டாலின்

இதனுடைய உண்மையான நோக்கத்தை நீங்கள் மக்களிடம் கொண்டு சேர்க்கக் கேட்டுக் கொள்கிறேன். தொகுதி மறுசீரமைப்பு என்பது, நமது மாநிலத்தின் சுயமரியாதை, சமூகநீதி, நம்முடைய சமூக நலத்திட்டங்களைப் பெரிதும் பாதிக்கும். இதை நீங்கள் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். ஒவ்வொருவரும் மாநிலம் காக்க எழுந்து நிற்க வேண்டும். இந்தியாவுக்கே வழிகாட்டியாக நாம் போராட்டத்தைத் தொடங்கினோம். இப்போது கர்நாடகா, பஞ்சாப், தெலங்கானா போன்ற மாநிலங்களில் இருந்து நமக்கான ஆதரவுக் குரல் வந்துள்ளது.

இதைப் பார்த்த ஒன்றிய அரசு, இந்தியைத் திணிக்கவில்லை என்று சொல்லிக்கொண்டே அதற்கான அனைத்து முன்னெடுப்புகளையும் எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாததால், நமக்கான நிதியையும் இன்னும் தரவில்லை. அதேபோல், தமிழ்நாட்டிற்கான தொகுதிகளைக் குறைக்க மாட்டோம் என்று மட்டும் தான் சொல்கிறார்களே தவிர, மற்ற மாநிலங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மாட்டோம் என்று சொல்லவில்லை.

நாம் கேட்பது, மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளைப் பிரிக்காதீர்கள் என்றுதான். நாட்டினுடைய வளர்ச்சிக்காக மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய தென்மாநிலங்களைத் தண்டிக்காதீர்கள். அப்படி நடந்தால், அதைத் தமிழ்நாடும் தி.மு.க.,வும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். நாம் ஒரு உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் நலனையும், எதிர்காலத்தையும், யாருக்காகவும், எதற்காகவும் விட்டுத்தர மாட்டோம். தமிழ்நாட்டுக்காக நாம் ஒன்றுபட்டு போராட வேண்டும். தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!" என்று பேசியிருக்கிறார்.

Zelensky: 'ட்ரம்ப் எப்படி ஜெலன்ஸ்கியை அடிக்காமல் விட்டார்?' - USA Vs Ukraine-ல் ரஷ்யா ரியாக்‌ஷன்

நேற்று நடந்த ட்ரம்ப் மற்றும் ஜெலன்ஸ்கியின் சந்திப்பு, வார்த்தைப் போராக முற்றி படுதோல்வியில் முடிந்துள்ளது. இந்த சந்திப்பில் கனிம ஒப்பந்தம் கையெழுத்தாவதுடன், ரஷ்யா - உக்ரைன் போர் குறித்து நல்ல முடிவுகள... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பு: `தமிழ்நாட்டின் குரல்வளை முழுமையாக நசுக்கப்படும்' - எதிர்ப்பு கிளப்புவது ஏன்?

எதிர்க்கும் தென் இந்தியாதொகுதி மறுசீரமைப்பு மத்திய பா.ஜ.க அரசு பதவியேற்றது முதல் தொகுதி மறுசீரமைப்பு, `ஒரே நாடு, ஒரே தேர்தல்' நடைமுறையை கொண்டுவர தீவிரம் காட்டி வருகிறது. புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்... மேலும் பார்க்க

USA -Ukraine: `சத்தமாக பேசுவதை நிறுத்துங்கள்' - வாக்குவாதத்தில் முடிந்த சந்திப்பு- என்ன நடந்தது?

ஒப்பந்தத்தில் கையெழுத்திட...உக்ரைன் போருக்கு அமெரிக்கா செலவு செய்வதை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விரும்பவில்லை. மேலும், உக்ரைன் அதிபர் போர் என்ற பெயரை காரணம் காட்டி ஆட்சியில் நீடிக்கிறார் என்றும், அவருக்க... மேலும் பார்க்க

Seeman : 'என்னையும் என் குடும்பத்தையும் இப்படி குதறி தின்கிறீர்களே' - உணர்ச்சி வசப்பட்ட சீமான்!

நடிகை கொடுத்த பாலியல் புகாரில் வளசரவாக்கம் காவல்நிலையத்தில் ஆஜரான நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், விசாரணையை முடித்துவிட்டு நள்ளிரவில் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். பத்திரிகையாளர்... மேலும் பார்க்க

ஆஜராகும் சீமான்; வளசரவாக்கத்தில் குவிந்த நாதக-வினர்... 50-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்க திட்டம்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை ஒருவர் தாக்கல் செய்த பாலியல் புகார் வழக்கில், சீமானிடம் விசாரணை நடத்துமாறு சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, விசார... மேலும் பார்க்க

`ஒரு பைசா கூட Pension வரல; இனியும் பொறுத்திருக்க முடியாது' Jacto Geo venkatesan | M K Stalin

Jacto Geo அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் கூட்மைப்பினர் பழைய ஓய்வூதியத் திட்டம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த கோரிக்கைகள் குறித்தும் அரசு அதை நிறைவேற்றாதது க... மேலும் பார்க்க