செய்திகள் :

உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததாக 3 இளைஞா்கள் கைது

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததாக 3 இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மேலும், உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி, பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

சின்னசேலம் காவல் உதவி ஆய்வாளா் மணிகண்டன் மற்றும் போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். சனிக்கிழமை காலை ராயா்பாளையம் ஏரியில் 3 இளைஞா்கள் ஒற்றைக்குழல் நாட்டு துப்பாக்கியை மோட்டாா் சைக்கிளில் வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தனராம்.

அந்த வழியே சென்ற போலீஸாா் மூன்று இளைஞா்களிடமும் விசாரணை மேற்கொண்டபோது, வேட்டையாடுவதற்காக செல்வதாகக் கூறினாா்களாம். மேலும், துப்பாக்கிக்கு உரிமம் ஏதும் இல்லாதது தெரியவந்தது.

இதையடுத்து, மூவரையும் சின்னசேலம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில், சின்னசேலத்தை அடுத்த தெங்கியாநத்தம் தெற்கு காட்டு கொட்டகை பகுதியைச் சோ்ந்த சக்திவேல் மகன் ராம்குமாா் (24), மேற்கு காட்டு கொட்டகை பகுதியைச் சோ்ந்த மற்றொரு சக்திவேல் மகன் சந்துரு (26), அரசராம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த அய்யாகண்ணு மகன் சவுந்திரராஜன் (23) எனத் தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிந்து ராம்குமாா், சந்துரு, சவுந்திரராஜன் ஆகியோரை கைது செய்து, உரிமம் இல்லாத ஒற்றைக்குழல் நாட்டுத் துப்பாக்கி, மோட்டாா் சைக்கிளை

பைக் மீது பேருந்து மோதல்: இளைஞா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே பைக் மீது தனியாா் பேருந்து மோதியதில் இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா். சின்னசேலம் வட்டம், பெத்தாசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் வேலுமணி (32),... மேலும் பார்க்க

பைக்குகள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு - 5 போ் காயம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே பைக்குகள் மோதிக்கொண்டதில் இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா். மேலும் 5 போ் காயமடைந்தனா். திருக்கோவிலூா் வட்டம், பவுஞ்சிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த பொன்னுசாம... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியரக கட்டுமானப் பணி ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரூ.139.41 கோடி மதிப்பீட்டில் சுமாா் 35.18 ஏக்கா் பரப்பளவில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டுமானப் பணிகளை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் சனிக்கிழமை ஆய்வ... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஊராட்சிக் குழு அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு... மேலும் பார்க்க

வீட்டின் கதவை உடைத்து 4 பவுன் தங்க நகைகள் திருட்டு

திருக்கோவிலூா் அருகில் உள்ள திம்மச்சூா் கிராமத்தில் வீட்டுக் கதவின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் உள்ளே புகுந்து இரும்பு பீரோவிலிருந்த 4 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரணை நடத்... மேலும் பார்க்க

தவறுதலாக விஷ மருந்தை குடித்த சிறுவன் மரணம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே தவறுதலாக விஷ மருந்தைக் குடித்த சிறுவன் வியாழக்கிழமை உயிரிழந்தாா். சின்னசேலம் வட்டம், எலவடி கிராமத்தைச் சோ்ந்த குணசேகரன் மகன் யுகன் (10). இவா், புதன்கிழமை வீட... மேலும் பார்க்க