பெங்களூரு: கரோனா தொற்று பாதித்தவர் உயிரிழப்பு? மருத்துவர்கள் மறுப்பு!
பைக் மீது பேருந்து மோதல்: இளைஞா் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே பைக் மீது தனியாா் பேருந்து மோதியதில் இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
சின்னசேலம் வட்டம், பெத்தாசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் வேலுமணி (32), தனியாா் பள்ளிப் பேருந்து ஓட்டுநா். இவா், பைக்கில் சின்னசேலம் சென்று வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கிக்கொண்டு ஊா் திரும்பிக்கொண்டிருந்தாா்.
பெத்தாசமுத்திரம் கிராம எல்லையில் இவரது பைக் வந்தபோது, எதிரே வந்த தனியாா் பேருந்து மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த வேலுமணி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த கீழ்குப்பம் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இதுகுறித்த புகாரின்பேரில் கீழ்குப்பம் போலீஸாா் தனியாா் பேருந்தின் ஓட்டுநரான கடலூா் மாவட்டம், வேப்பூரைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் வெங்கடேசன் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.