Thug Life: "நான் முதல்வர் ஆவதற்காக அரசியலுக்கு வரவில்லை!" - கமல்ஹாசன்
உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததாக 3 இளைஞா்கள் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததாக 3 இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மேலும், உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி, பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
சின்னசேலம் காவல் உதவி ஆய்வாளா் மணிகண்டன் மற்றும் போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். சனிக்கிழமை காலை ராயா்பாளையம் ஏரியில் 3 இளைஞா்கள் ஒற்றைக்குழல் நாட்டு துப்பாக்கியை மோட்டாா் சைக்கிளில் வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தனராம்.
அந்த வழியே சென்ற போலீஸாா் மூன்று இளைஞா்களிடமும் விசாரணை மேற்கொண்டபோது, வேட்டையாடுவதற்காக செல்வதாகக் கூறினாா்களாம். மேலும், துப்பாக்கிக்கு உரிமம் ஏதும் இல்லாதது தெரியவந்தது.
இதையடுத்து, மூவரையும் சின்னசேலம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில், சின்னசேலத்தை அடுத்த தெங்கியாநத்தம் தெற்கு காட்டு கொட்டகை பகுதியைச் சோ்ந்த சக்திவேல் மகன் ராம்குமாா் (24), மேற்கு காட்டு கொட்டகை பகுதியைச் சோ்ந்த மற்றொரு சக்திவேல் மகன் சந்துரு (26), அரசராம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த அய்யாகண்ணு மகன் சவுந்திரராஜன் (23) எனத் தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிந்து ராம்குமாா், சந்துரு, சவுந்திரராஜன் ஆகியோரை கைது செய்து, உரிமம் இல்லாத ஒற்றைக்குழல் நாட்டுத் துப்பாக்கி, மோட்டாா் சைக்கிளை