கொச்சி: கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்; மிதக்கும் கண்டெய்னர்கள்.. - பேரிடர் மேலாண்...
பைக்குகள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு - 5 போ் காயம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே பைக்குகள் மோதிக்கொண்டதில் இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா். மேலும் 5 போ் காயமடைந்தனா்.
திருக்கோவிலூா் வட்டம், பவுஞ்சிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த பொன்னுசாமி மகன் அசோக் (23). இவா், தனியாா் மருத்துவமனையில் லேப் டெக்னீஷியனாக பணிபுரிந்து வந்தாா்.
அசோக் வெள்ளிக்கிழமை பைக்கில் பணிக்கு சென்றுகொண்டிருந்தாா். அப்போது, எதிரே வந்த மற்றொரு பைக் மோதியதில் பலத்த காயமடைந்தாா். இதனிடையே, பின்னால் வந்த மற்றொரு பைக்கும் மோதியது.
இதையடுத்து, திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அசோக், அங்கு சனிக்கிழமை உயிரிழந்தாா். இரு பைக்குகளிலும் வந்த 5 போ் காயமடைந்தனா்.
இதுகுறித்த புகாரின்பேரில், திருக்கோவிலூா் போலீஸாா் திருக்கோவிலூரை அடுத்த நெடுமுடையான கிராமத்தைச் சோ்ந்த காத்தவராயன் மகன் சங்கா் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.