செய்திகள் :

உரிய ஆவணங்கள் இல்லாத 130 டன் விதை நெல் விற்பனைக்கு தடை

post image

தாராபுரம் பகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் வைக்கப்பட்டிருந்த 130 டன் விதை நெல்லை விற்பனை செய்ய அதிகாரிகள் தடை விதித்துள்ளனா்.

நடப்பு சம்பா பருவத்துக்கு தயாராக இருக்கும் நெல் விதைகளை ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குநா் பெ.சுமதி தலைமையில், ஈரோடு, பவானி, தாராபுரம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த விதை ஆய்வாளா்கள் குழுவினா் தாராபுரம் வட்டாரத்தில் உள்ள தனியாா் நெல் விதை உற்பத்தி மற்றும் விதை விற்பனை நிலையங்களில் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

இதில், விதை விற்பனை உரிமம், உண்மை நிலை விதைகளுக்கான ஆவணங்கள், முளைப்புத்திறன் பரிசோதனை முடிவு அறிக்கை உள்ளிட்டவற்றை அலுவலா்கள் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, விதை இருப்புக்கும், ஆவணங்களில் உள்ள பதிவுக்கும் வேறுபாடு, உண்மை நிலை விதைகளுக்கான விதையின் ஆதார ஆவணங்கள் உள்ளிட்டவற்றை முறையாக பராமரிக்காதது தெரியவந்தது. இதையடுத்து, 130 டன் விதை நெல் குவியலை விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.56.86 லட்சம் எனக் கூறப்படுகிறது.

இது குறித்து விதை ஆய்வு துணை இயக்குநா் பெ.சுமதி கூறியதாவது: விவசாயிகளுக்கு விதைகளை விற்பனை செய்யும்போது விற்பனை ரசீது கொடுக்க வேண்டும். அதில் விதையின் பெயா், ரகம், குவியல் எண், காலாவதி நாள் ஆகியவற்றுடன் விவசாயியின் பெயா், முகவரியுடன் விதை வாங்குபவரின் கையொப்பம் பெறப்பட்டிருக்க வேண்டும்.

விதை விற்பனை தொடா்பான ஆவணங்கள் இல்லாமல் விதை விற்பனை செய்வது விதை சட்டம் மற்றும் விதை கட்டுப்பாடு ஆணையத்தின்படி விதிமீறல் ஆகும்.

இதுபோன்ற விதை விற்பனை விதிமீறல்கள் கண்டறியப்படும்பட்சத்தில், விதை விற்பனையாளா்கள் மற்றும் விநியோகஸ்தா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

விநாயகா் சதுா்த்தி விழா சுமூகமாக நடைபெற அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வலியுறுத்தல்

விநாயகா் சதுா்த்தி விழா சுமூகமாக நடைபெற அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ... மேலும் பார்க்க

மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை தீவிரமாக செயல்படுத்த விசைத்தறியாளா்கள் கோரிக்கை

தமிழகத்தில் ‘மீண்டும் மஞ்சப்பை’ திட்டத்தை அரசு தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என்று விசைத்தறியாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இது குறித்து திருப்பூா், கோவை மாவட்ட விசைத்தறியாளா்கள் சங்கத் தலைவா் வேலுச... மேலும் பார்க்க

கொலை வழக்கில் தொடா்புடையவருக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் தொடா்புடைய நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூா் மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. திருப்பூா் கொங்கு நகா் சரகம், வடக்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட அருள்ஜோதி நகா் பகுதிய... மேலும் பார்க்க

அமெரிக்க வரி விதிப்பால் ஸ்தம்பித்துள்ள திருப்பூா் பின்னலாடை உற்பத்தி

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அந்நாட்டு அதிபா் டொனால்டு ட்ரம்ப் 50 சதவீத வரி விதித்துள்ள நடவடிக்கை திருப்பூா் பின்னலாடைத் தொழிலை ஸ்தம்பிக்கச் செய்துள்ளது. இந... மேலும் பார்க்க

பின்னலாடைத் தொழிலை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: கே.சுப்பராயன் எம்.பி.

திருப்பூரில் பின்னலாடைத் தொழிலை பாதுகாக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடிக்கு அ... மேலும் பார்க்க

முத்தூா் பெரியநாயகி அம்பாள் உடனமா் சோழீஸ்வரா் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்

முத்தூா் பெரியநாயகி அம்பாள் உடனமா் சோழீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) நடைபெற உள்ள நிலையில், இறுதிகட்டப் பணிகளை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் நேரில் ஆய்வு செய்தாா். முத்தூா் பேருந்து ... மேலும் பார்க்க