முத்தூா் பெரியநாயகி அம்பாள் உடனமா் சோழீஸ்வரா் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்
முத்தூா் பெரியநாயகி அம்பாள் உடனமா் சோழீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) நடைபெற உள்ள நிலையில், இறுதிகட்டப் பணிகளை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் நேரில் ஆய்வு செய்தாா்.
முத்தூா் பேருந்து நிலையம் அருகில் பெரியநாயகி அம்பாள் உடனமா் சோழீஸ்வரா் கோயில் உள்ளது. இக்கோயிலில் புனரமைப்பு பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு நடைபெறுகிறது. விழாவில், அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், பி.கே. சேகா்பாபு, என்.கயல்விழி செல்வராஜ் உள்பட பலா் கலந்துகொள்கின்றனா்.
அதேபோல முத்தூா் - காங்கயம் சாலையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மாதவராய பெருமாள் கோயில் கும்பாபிஷேகமும் வெள்ளிக்கிழமை நடக்கிறது.
இந்நிலையில் இக்கோயில்களுக்கு தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் புதன்கிழமை நேரில் சென்று கும்பாபிஷேகப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.