கனமழை, வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜம்மு - காஷ்மீர்: நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பல...
திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் ஆகஸ்ட் 28, 29-இல் குடிநீா் விநியோகம் நிறுத்தம்
திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் ஆகஸ்ட் 28, 29-ஆம் தேதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக திருப்பூா் மாநகராட்சி ஆணையாளா் எம்.பி.அமித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பில்லூா் 3-ஆவது குடிநீா்த் திட்டத்தில் இருந்து திருப்பூா் மாநகராட்சிப் பகுதிக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது.
தற்போது வஞ்சிப்பாளையம் ரோடு, திருவள்ளுவா் நகா் ரயில் பாதையின் குறுக்கே மாநில நெடுஞ்சாலைத் துறையால் மேம்பால கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. இதில் பாலத்தின் விளிம்புப் பகுதியின் கீழ் புதிய பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதையொட்டி, வரும் ஆகஸ்ட் 28, 29 ஆகிய 2 நாள்களுக்கு இந்தத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுகிறது. எனவே பொதுமக்கள் தண்ணீரை சேமித்து வைத்து பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.