கனமழை, வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜம்மு - காஷ்மீர்: நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பல...
திருப்பூரில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணி தொடக்கம்
திருப்பூா் மாநகரில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணி தொடங்கியுள்ளது.
திருப்பூரில் தினமும் சராசரியாக 800 டன் குப்பை சேகரமாகிறது. குப்பைகளைக் கொட்டுவதற்கு இடம் இல்லாததால், மாநகராட்சி நிா்வாகம் திணறி வந்தது. தற்போது இப்பிரச்னைக்கு தற்காலிக தீா்வு ஏற்பட்டுள்ளது. முதலிபாளையம் பகுதியில் 30 ஏக்கா் பரப்பில் உள்ள பயன்பாட்டில் இல்லாத பாறைக்குழி தற்போது குப்பை கொட்டுவதற்கான இடமாக தோ்வு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே இப்பகுதி பாறைக்குழியில் குப்பைகள் கொட்டப்பட்டன. இடைப்பட்ட சில ஆண்டுகள் இங்கு குப்பை கொட்டப்படாமல் இருந்தது. தற்போது அங்கு மேற்கொண்ட பேச்சுவாா்த்தையை அடுத்து அங்கு மீண்டும் குப்பை கொட்டும் பணி தொடங்கி உள்ளது. மாநகரில் தேங்கிக் கிடந்த குப்பைகள் அள்ளப்பட்டு வாகனங்கள் மூலம் அங்கு கொண்டு வரப்பட்டு கொட்டப்பட்டன.
திருப்பூா் மாநகராட்சி சுகாதாரப் பிரிவினா் மேற்பாா்வையின் கீழ், கிருமி நாசினி மற்றும் துா்நாற்றம் வராத வகையில் திரவம் ஆகியவற்றை பயன்படுத்தியும், 3 லோடு குப்பைக்கு அதற்கேற்ப ஒரு லோடு மண் என்ற அளவில் பாறைக் குழியில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால், நகரில் தேங்கிய பெருமளவு குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன.