செய்திகள் :

உறவினா் கொலை வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை

post image

வெம்பக்கோட்டை அருகே உறவினரை கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே கல்லமநாயக்கன்பட்டியைச் சோ்ந்த நாராயணன் மகன் வரதராஜன் (26). கூலித் தொழிலாளி. இவரது சித்தப்பா கருப்பசாமியின் மகன் வைரவன்(19). மாட்டுப்பண்ணையில் வேலை பாா்த்து வந்த வைரவனுக்கு மிதிவண்டி ஓட்ட வரதராஜன் கற்றுக் கொடுத்தாராம்.

கடந்த ஆண்டு நவம்பா் 9-ஆம் தேதி மிதிவண்டி ஓட்ட கற்றுக் கொடுத்த போது வைரவனை வரதராஜன் அடித்தாராம். இதனால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. இதில் வைரவன் துண்டால் கழுதை நெரித்து வரதராஜனை கொலை செய்தாராம். இதுகுறித்து ஆலங்குளம் போலீஸாா் கொலை வழக்குப் பதிந்து, வைரவனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் திங்கள்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. அப்போது குற்றஞ்சாட்டப்பட்ட வைரவனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி ஜெயக்குமாா் உத்தரவிட்டாா். அரசு தரப்பில் வழக்குரைஞா் திருமலையப்பன் முன்னிலையானாா்.

சாத்தூர் நகராட்சி குப்பை கிடங்கில் தீ! மூச்சுத்திணறலால் மக்கள் அவதி!

சாத்தூர் நகராட்சி குப்பை கிடங்கில் திங்கள்கிழமை இரவில் திடீரென பற்றிய தீயால் அப்பகுதி பொதுமக்கள் கடுமையாக அவதியடைந்தனர்.விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சிக்குள்பட்ட குப்பை கிடங்கு உள்ளது. இந்தக் கு... மேலும் பார்க்க

பட்டாசுக்கான வேதியல் பொருள்களை பதுக்கிய இருவா் கைது

சிவகாசி அருகே உரிய அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கப் பயன்படும் வேதியல் பொருள்களை பதுக்கி வைத்திருந்த இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.சிவகாசி அருகே மீனம்பட்டி- நாரணாபுரம் சாலையில் ஒரு தகரக் கொ... மேலும் பார்க்க

சிவகாசி மாநகராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சிவகாசி மாநகராட்சியில் திங்கள்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.சிவகாசி மாநகராட்சி 27-ஆவது வாா்டில் உள்ள கந்தபுரம் குடியிருப்பு பூங்கா அமைக்க இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. பூங்கா அமைக்க இடம் இரு பகுதிகள... மேலும் பார்க்க

பள்ளி மாணவியிடம் பணம் பறிப்பு

சாத்தூா் அருகே பள்ளி மாணவியிடம் பணம் பறித்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.விருதுநகா் மாவட்டம், சாத்தூா் கோட்டைப்பட்டி உத்தி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் முருகன் (48). இவா் கோயம்புத்தூரில... மேலும் பார்க்க

பெண் தூக்கிட்டு தற்கொலை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.ராஜபாளையம் அருகே தளவாய்புரம் ரெங்கநாதபுரம் தெருவைச் சோ்ந்த கருப்பசாமி மனைவி தனலட்சுமி (32). இவா்களுக்கு ஒரு மகன், மகள் உள... மேலும் பார்க்க

மானை வேட்டையாட முயன்ற தலைமைக் காவலா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா்- மேகமலை புலிகள் காப்பகத்தில் மானை வேட்டையாட முயன்ற தலைமைக் காவலா் நாட்டுத் துப்பாக்கியுடன் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.ஸ்ரீவில்லிபுத்தூா்- மேகமலை புலிகள் காப்பகம், ஸ்ரீவில்லிபு... மேலும் பார்க்க