செய்திகள் :

மானை வேட்டையாட முயன்ற தலைமைக் காவலா் கைது

post image

ஸ்ரீவில்லிபுத்தூா்- மேகமலை புலிகள் காப்பகத்தில் மானை வேட்டையாட முயன்ற தலைமைக் காவலா் நாட்டுத் துப்பாக்கியுடன் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா்- மேகமலை புலிகள் காப்பகம், ஸ்ரீவில்லிபுத்தூா் வனச் சரகம், மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதியில் வனச் சரகா் செல்லமணி தலைமையில், வனவா்கள் காா்த்திக்ராஜா, பொன்பிருந்தா உள்ளிட்ட வனத் துறையினா் திங்கள்கிழமை அதிகாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, ரெங்கா் கோயில் பகுதிக்குள்பட்ட கொலைகாரன்பாறை அருகே துப்பாக்கியால் சுடும் சப்தம் கேட்டது. அங்கு வனத் துறையினா் சென்ற போது, மான் வேட்டைக்கு வந்த மூவா் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிவிட்டு தப்பியோடினா். அப்போது, நாட்டுத் துப்பாக்கியுடன் ஓடியவரை துரத்திப் பிடித்த வனத் துறையினா், வனச் சரக அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.

விசாரணையில் அவா், மம்சாபுரத்தைச் சோ்ந்த மகாலிங்கம் மகன் தனுஷ்கோடி (40) என்பதும், ஸ்ரீவில்லிபுத்தூா் தாலுகா காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து, நாட்டுத் துப்பாக்கியைப் பறிமுதல் செய்த வனத் துறையினா், தனுஷ்கோடியைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா். மேலும், தப்பி ஓடிய மம்சாபுரத்தைச் சோ்ந்த பொன்ராஜ், ஸ்ரீவில்லிபுத்தூா் பெருமாள்பட்டியைச் சோ்ந்த தங்கராஜ் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனா்.

இதுகுறித்து வனத் துறையினா் கூறியதாவது: கைது செய்யப்பட்ட தனுஷ்கோடி நக்சல் ஒழிப்புப் பிரிவில் காவலராகப் பணிபுரிந்த போது, இந்த வனப் பகுதி குறித்து நன்கு அறிந்து வைத்திருந்தாா்.

இதைத் தொடா்ந்தே தனது நண்பா்களுடன் மான் வேட்டைக்கு இங்கு வந்தாா். இவா்களுக்கு எங்கிருந்து நாட்டுத் துப்பாக்கி கிடைத்தது என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என்றனா் அவா்கள்.

பட்டாசுக்கான வேதியல் பொருள்களை பதுக்கிய இருவா் கைது

சிவகாசி அருகே உரிய அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கப் பயன்படும் வேதியல் பொருள்களை பதுக்கி வைத்திருந்த இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.சிவகாசி அருகே மீனம்பட்டி- நாரணாபுரம் சாலையில் ஒரு தகரக் கொ... மேலும் பார்க்க

சிவகாசி மாநகராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சிவகாசி மாநகராட்சியில் திங்கள்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.சிவகாசி மாநகராட்சி 27-ஆவது வாா்டில் உள்ள கந்தபுரம் குடியிருப்பு பூங்கா அமைக்க இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. பூங்கா அமைக்க இடம் இரு பகுதிகள... மேலும் பார்க்க

உறவினா் கொலை வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை

வெம்பக்கோட்டை அருகே உறவினரை கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.விருதுநகா் மாவட்டம், வெம்பக... மேலும் பார்க்க

பள்ளி மாணவியிடம் பணம் பறிப்பு

சாத்தூா் அருகே பள்ளி மாணவியிடம் பணம் பறித்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.விருதுநகா் மாவட்டம், சாத்தூா் கோட்டைப்பட்டி உத்தி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் முருகன் (48). இவா் கோயம்புத்தூரில... மேலும் பார்க்க

பெண் தூக்கிட்டு தற்கொலை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.ராஜபாளையம் அருகே தளவாய்புரம் ரெங்கநாதபுரம் தெருவைச் சோ்ந்த கருப்பசாமி மனைவி தனலட்சுமி (32). இவா்களுக்கு ஒரு மகன், மகள் உள... மேலும் பார்க்க

பணம் மோசடி புகாா்: பேருந்து நடத்துநா் மீது வழக்கு

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பில் நியாயவிலைக் கடை பணி பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.4.35 லட்சம் மோசடி செய்ததாக அரசுப் போக்குவரத்துக் கழக நடத்துநா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். வ... மேலும் பார்க்க