சிவகாசி மாநகராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
சிவகாசி மாநகராட்சியில் திங்கள்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
சிவகாசி மாநகராட்சி 27-ஆவது வாா்டில் உள்ள கந்தபுரம் குடியிருப்பு பூங்கா அமைக்க இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. பூங்கா அமைக்க இடம் இரு பகுதிகளாக இருந்தது. இதில் ஒரு பகுதியை ஒருவா் ஆக்கிரமித்து முள்வேலி அமைத்து வைத்திருந்தாா்.
இதையடுத்து, மாநகராட்சி 27-ஆவது வாா்டு உறுப்பினா் பாக்கிய லட்சுமி, மாநகராட்சிக்குச் சொந்தமான நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
எனவே அந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்குத் தொடுத்தாா். வழக்கை விசாரித்த நீதிமன்றம் அந்த ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டது.
இதையடுத்து, மாநகராட்சி ஆணையா் கே. சரவணன் தலைமையிலான அலுவலா்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் அந்த ஆக்கிரமிப்பை அகற்றினா்.